ETV Bharat / sitara

Bigg Boss 5: ஜோடியாகப் பறந்த போட்டியாளர்கள்... அதிர்ச்சி கொடுத்த கமல் ஹாசன்

author img

By

Published : Dec 27, 2021, 11:37 AM IST

varun and Akshara
varun and Akshara

பிக்பாஸ் ஐந்தாவது சீசனிலிருந்து இந்த வாரம் இரண்டு பேர் வெளியேறியுள்ளதாக கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 85 நாள்களைக் கடந்துள்ளது. இன்னும் நிகழ்ச்சி நிறைவடைய இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 10 நபர்கள் உள்ளனர்.

இதனையொட்டி நேற்று (டிசம்பர் 26) இரண்டு நபர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அக்‌ஷரா, வருண் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாகக் கமல் ஹாசன் அறிவித்தார்.

இருவருமே நெருங்கிய நண்பர்களாக பிக்பாஸ் வீட்டில் பழகிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அபினய், இமான், அபிஷேக், ஐக்கி, இசைவாணி, மதுமீதா, ஸ்ருதி, சின்ன பொன்னு, நாடியா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இதையும் படிங்க: Bigg Boss 5: என்னது இந்த வாரம் இவர் வெளியே செல்கிறாரா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.