ETV Bharat / sitara

சன்னி லியோன் எடுத்துள்ள சூப்பர் ஹீரோ அவதாரம்

author img

By

Published : Nov 4, 2019, 12:16 PM IST

Updated : Nov 9, 2019, 4:25 PM IST

கோர் கதாபாத்திரத்தில் சன்னி லியோன்

தீய சக்திகளை அழிப்பதற்காக 'கோர்' என்ற சூப்பர் ஹீரோவாக உருமாறியுள்ளார் நடிகை சன்னி லியோன். கோர் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமாக காணொலி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


மும்பை: கவர்ச்சியான கதாபாத்திரங்களில் கலக்கிவந்த நடிகை சன்னி லியோன் தற்போது சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

பாலிவுட் சினிமாக்கள், டிவி ஷோக்கள் என பிஸியாக உள்ள நடிகை சன்னி லியோன் தற்போது சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார். தீய சக்திகளிடமிருந்து உலகைக் காக்கும் 'கோர்' என்ற சூப்பர் ஹீரோ கேரக்டராக அவதாரம் எடுத்துள்ள அவர், அந்தக் கதாபாத்திரத்துக்கான அறிமுக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கோர் இந்தக் கிரகத்தை சேர்ந்தவள் இல்லை. ஆனாலும் தீய சக்திகளிடமிருந்து உலகைக் காக்க தயாராக இருக்கிறாள் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சன்னி லியோன் கூறுகையில், 'சூப்பர் ஹீரோ கதையை நானும் எனது கணவர் டேனியல் வெப்பரும் இணைந்து உருவாக்கினோம். அந்த வகையில் கோர் கதாபாத்திரம் தீய சக்திகளை அழிக்கவருகிறது' என்றார்.

சன்னி லியோனின் சூப்பர் ஹீரோ அவதாரம்

இதனிடையே, ஹாலிவுட் சூப்பர் ஹிட் படமான 'மேட்ரிக்ஸ்' பட கதாபாத்திரங்களின் லுக் போன்று சன்னி லியோனின் கோர் லுக் அமைத்திருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

பாலிவுட் சினிமாவில் நடிக்கவந்த புதிதில் சூப்பர்ஹீரோவாக தனக்கு நடிக்க ஆசை என்று விருப்பம் தெரிவித்திருந்தார் சன்னி. இதையடுத்து தற்போது அதை நிறைவேற்றியுள்ளார். கோர் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Intro:Body:



Mumbai, Nov 2 (IANS) Sunny Leone on Saturday introduced a superhero character on social media.



Sunny and husband Daniel Weber have unveiled Kore -- the superhero who is arriving "to finish all evil", in Sunny's words.



"The concept of a superhero is something that Daniel and I have been working on for a while, which gave birth to the superhero Kore, here to finish all evil," said Sunny, who is seen sporting a figure-hugging costume and blonde hair in a video that features her as the superhero.



Years ago, asked if she had any interest in the superhero genre by a fan, the "Jism 2" actress had said: "Yes, I want to play a superhero."



In the video that the actress shared, Sunny's costume as well as the milieu seems heavily inspired by "The Matrix". In the video, we see an entire city up in flames. Sunny, who moves around in a supercar, naturally gets into action to save the city.



Kore is produced by Suncity Media Limited. The music of the video has been composed by Daniel and Grammy-winning producer Ken Wallace.


Conclusion:
Last Updated :Nov 9, 2019, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.