ETV Bharat / sitara

Bigg Boss 5 இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?

author img

By

Published : Dec 18, 2021, 1:42 PM IST

பிக்பாஸ்
பிக்பாஸ்

பிக்பாஸ் ஐந்தாவது சீசனிலிருந்து இந்த வாரம் யார் வெளியே செல்லப் போகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி 75 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவருகிறது. சண்டை, போட்டி எனப் பார்வையாளர்களுக்குச் சலிப்பு இருக்கக் கூடாது என்பதற்காகப் போட்டியாளர்கள் கன்டென்ட் கொடுத்துவருகின்றனர்.

இந்த வார நாமினேஷன் வழக்கம்போல் இல்லாமல் சற்று சுவாரஷியமாக இருந்தது. அனைவரையும் நாமினேட் செய்த பிக்பாஸ் சிறிய போட்டிகள் வைத்து அவர்களைத் தப்பிக்க வாய்ப்பு கொடுத்தார். இதில் இறுதிவரை அனைத்துப் போட்டிகளிலும் வென்று தாமரை எலிமினேஷனிலிருந்து தப்பித்தார்.

இவரைப் போலவே சிபி, நிரூப், சஞ்சீவ், அமீர் ஆகியோர் நாமினேஷனிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள அபினய், பாவனி, பிரியங்கா, வருண், ராஜு, அக்‌ஷரா ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

அபினய்
அபினய்

இந்நிலையில் மக்களிடம் குறைவான மதிப்பெண் பெற்று அபினய் இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எப்போதும் எலிமினேஷனில் இறுதிவரை வந்து தப்பிக்கும் அபினய் இந்த வாரம் வெளியே செல்வது அவரது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: BB Day 59 - பிரேக்கிங் நியூஸால் இரண்டாகப் பிரிந்த பிக்பாஸ் வீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.