ETV Bharat / sitara

தேசிய விருது வென்ற இமானை வாழ்த்திய விஸ்வாசம் படக்குழு!

author img

By

Published : Apr 4, 2021, 9:26 AM IST

viswasam
viswasam

சென்னை: சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது வாங்கிய டி. இமானை 'விஸ்வாசம்' படக்குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்தினர்.

இயக்குநர் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, தமிழ்நாட்டில் அதிக வசூலைப் பெற்ற படங்கள் பட்டியலிலும் இணைந்தது.

இந்தப் படத்தில் அஜித்துடன், நயன்தாரா, விவேக், கோவை சரளா, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சத்தியஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்த இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைத்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்குப் பிடித்தமான பாடலாக அமைந்தன. அதிலும் "கண்ணான கண்ணே" பாடல் தந்தைக்கும், மகளுக்கும் இடையேயான பாசத்தை விளக்கும் பாடலாக அமைந்ததுடன், பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

இந்நிலையில், 67ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, 'விஸ்வாசம்' படத்தின் பாடல்களுக்காக இசையமைத்த, இசையமைப்பாளர் டி. இமானுக்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பாளர் சத்தியஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜனைச் சந்தித்து, இமான் அவரிடம் வாழ்த்துப் பெற்றார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், இயக்குநர் சிறுத்தை சிவா உள்ளிட்ட 'விஸ்வாசம்' படக்குழுவினர் டி. இமானை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: நான் எதையும் எதிர்பார்த்து இருப்பவன் இல்லை - ஈடிவி பாரத்துக்கு டி இமான் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.