ETV Bharat / sitara

தெலுங்கு நடிகைக்கு நோ சொன்ன விஜய் சேதுபதி!

author img

By

Published : Sep 8, 2021, 8:37 AM IST

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி பிரபல தெலுங்கு நடிகையுடன் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தெலுங்கில் 'உப்பெனா' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். புஜ்ஜி பாபு சனா இயக்கிய இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதில் நடிகர் விஜய் சேதுபதி, கிருதி ஷெட்டியின் தந்தையாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி மிரட்டும் வில்லனாகவும் படத்தில் நடித்து அசத்தினார்.

இவர்களை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க இயக்குநர் பிரேம் குமார் முடிவு செய்து, விஜய் சேதுபதியிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.

உப்பெனா
உப்பெனா

ஆம்... மகள் கதாபாத்திரத்தில் கிருதி ஷெட்டியுடன் நடித்துவிட்டதால், அவருடன் ஜோடியாக நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாகப் படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'துக்ளக் தர்பார்', 'லாபம்', 'கடைசி விவசாயி' ஆகியவை இந்த வாரம் வெளியாகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.