ETV Bharat / sitara

ஜெயம் ரவியின் தங்கையாகிய த்ரிஷா!

author img

By

Published : Jan 26, 2020, 3:05 PM IST

Trisha to play Jayam Ravi sister in Ponniyin Selvan
Trisha to play Jayam Ravi sister in Ponniyin Selvan

வரலாற்றுத் திரைப்படமாக மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் ஜெயம் ரவிக்குத் தங்கையாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளது முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயம் ரவிக்கு நடிகை த்ரிஷா தங்கையாக நடிக்கும் செய்தி வெளியாகி, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு முன்பாக த்ரிஷா, ஜெயம் ரவி இருவரும் 'உனக்கும் எனக்கும்', 'சகலகலா வல்லவன்', 'பூலோகம்' ஆகிய திரைப்படங்களில் ஒன்றாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

Trisha to play Jayam Ravi sister in Ponniyin Selvan
சகலகலா வல்லவன்
ஜெயம் ரவி, விக்ரம் பிரபு நடிக்கும் அருள்மொழி வர்மன், ஆதித்ய கரிகாலன் ஆகிய கதாபாத்திரங்களின் தங்கை குந்தவை பாத்திரத்தில் த்ரிஷா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. கதையின் நாயகி குந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'அனிலுடன் நடித்தது மிகவும் பிரமிப்பாக இருந்தது'- சிலிர்த்த திஷா பதானி

Intro:Body:

Trisha to play Jayam Ravi's sister in 'Ponniyin Selvan'


Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.