#HBDSuperstarRajinikanth - இவன் திரையுலகை அதிரவைத்த அதிரடிக்காரன்

author img

By

Published : Dec 12, 2021, 11:50 AM IST

Updated : Dec 12, 2021, 12:07 PM IST

HBD Superstar Rajinikanth, SUPERSTAR RAJNIKANTH 71ST BIRTHDAY, rajnikanth life, rajinikanth age, rajnikanth bio, apoorva raagangal, Rajni, Rajni movies, rajni kalaignanam, kalaipulli S Dhanu, ரஜினிகாந்த் பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தாள், ரஜினிகாந்த் 71ஆவது பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் பட்டம், அபூர்வ ராகங்கள், ரஜினி கலைஞானம், கலைப்புலி எஸ்.தாணு கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம், பாலசந்தர்
HBDSuperstarRajinikanth ()

மதுரையில் திரைப்பட விநியோகஸ்தராக இருந்த கலைப்புலி எஸ். தாணு, போஸ்டர்களில் சூப்பர் ஸ்டார் என பெயரை அச்சிட்டு வெளியிட்டார். அப்போது எம்ஜிஆர், சிவாஜி உச்சத்தில் இருந்த நேரம், இந்த போஸ்டரால் சர்ச்சை எழும் என அதனை ரஜினி அப்போது நீக்க சொல்லியிருக்கிறார். ஆனால் அந்தப் பெயர் ரஜினியை விடவில்லை, மக்கள் மனதில் சூப்பர் ஸ்டாராகிவிட்டார் ரஜினி.

வெள்ளைத் தோலை மட்டுமே கொண்டாடிவந்த தமிழ் சினிமாவின் கதவுகளை திறந்துகொண்டு வந்தார் ரஜினிகாந்த் என்ற கறுப்பு நிற மனிதர். 1975ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற காட்சி அது, அன்று ரஜினி திறந்த கதவுகளை இன்றுவரை எவராலும் மூட முடியவில்லை. ரஜினி இந்திய சினிமாவின் பெருமையாக மாறிப்போனது அதற்கு முக்கிய காரணமாகும்.

பெங்களூரு பேருந்தில் நடத்துநராக காலத்தைக் கழித்திருக்க வேண்டிய ரஜினியின் வாழ்க்கையை மாற்றியது இயக்குநர் சிகரம் பாலசந்தரின் சந்திப்பு. ’அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினியை பாலசந்தர் அறிமுகப்படுத்தினார். 1978ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் உருவான ‘முள்ளும் மலரும்’ படத்தை பார்த்த பாலசந்தர், உன்னை அறிமுகப்படுத்தியதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்றார்.

HBD Superstar Rajinikanth, SUPERSTAR RAJNIKANTH 71ST BIRTHDAY, rajnikanth life, rajinikanth age, rajnikanth bio, apoorva raagangal, Rajni, Rajni movies, rajni kalaignanam, kalaipulli S Dhanu, ரஜினிகாந்த் பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தாள், ரஜினிகாந்த் 71ஆவது பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் பட்டம், அபூர்வ ராகங்கள், ரஜினி கலைஞானம், கலைப்புலி எஸ்.தாணு கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம், பாலசந்தர், நல்லவனுக்கு நல்லவன், nallavanuku nallavan

ஆபூர்வ ராகங்கள் தந்த அபூர்வம்

20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் ரஜினியை வைத்து மீண்டும் படம் இயக்குவீர்களா என பாலசந்தரிடம் கேட்டதற்கு, அவன் நான் தொடமுடியாத தூரத்துக்கு உயர்ந்துட்டான் என சொல்லியிருப்பார். இதுதான் ரஜினியின் வளர்ச்சி...

ஆரம்பகாலங்களில் மோசமான வில்லன், அடியாள், பெண் பித்தன் என இப்படியான கதாபாத்திரங்களே அதிகமாக தேடிவந்த ரஜினியின் திரைப்பயணத்தை மாற்றியது ‘புவனா ஒரு கேள்விக்குறி’, மென்மையான கதாபாத்திரங்களையும் நடிக்கக்கூடியவர் ரஜினிகாந்த் என்ற பிம்பத்தைக் கொடுத்தது இந்த படம்தான்... ஆனால் அதன்பிறகும் சில நெகட்டிவ் கதாபாத்திரங்கள் ரஜினியை தேடிவந்தன, அதையும் மறுக்காமல் நடித்தார்.

HBD Superstar Rajinikanth, SUPERSTAR RAJNIKANTH 71ST BIRTHDAY, rajnikanth life, rajinikanth age, rajnikanth bio, apoorva raagangal, Rajni, Rajni movies, rajni kalaignanam, kalaipulli S Dhanu, ரஜினிகாந்த் பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தாள், ரஜினிகாந்த் 71ஆவது பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் பட்டம், அபூர்வ ராகங்கள், ரஜினி கலைஞானம், கலைப்புலி எஸ்.தாணு கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம், பாலசந்தர்

தேடி வந்த பட்டம்

திரைக்கதாசிரியர் கலைஞானம் பணிபுரிந்த படம் ஒன்றில் ரஜினி கார் டிரைவர் வேடத்தில் நடித்துள்ளார், காரை ஸ்டார்ட் பண்ண சொன்னபோது ஸ்டைலாக ரஜினி சாவியை தூக்கிப்போட்டு பிடித்து ஸ்டார்ட் செய்தது கலைஞானத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ரஜினியின் உடல்மொழியால் ஈர்க்கப்பட்ட கலைஞானம், நான் படம் பண்ணினால் நீதான் கதாநாயகன் வேடத்தில் நடிக்கனும் என கூறியிருக்கிறார். கலைஞானம் தயாரிப்பில் உருவான ‘பைரவி’, ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக்கியது.

மதுரையில் திரைப்பட விநியோகஸ்தராக இருந்த கலைப்புலி எஸ். தாணு, போஸ்டர்களில் சூப்பர் ஸ்டார் என பெயரை அச்சிட்டு வெளியிட்டார். அப்போது எம்ஜிஆர், சிவாஜி உச்சத்தில் இருந்த நேரம், இந்த போஸ்டரால் சர்ச்சை எழும் என அதனை ரஜினி அப்போது நீக்க சொல்லியிருக்கிறார்.

HBD Superstar Rajinikanth, SUPERSTAR RAJNIKANTH 71ST BIRTHDAY, rajnikanth life, rajinikanth age, rajnikanth bio, apoorva raagangal, Rajni, Rajni movies, rajni kalaignanam, kalaipulli S Dhanu, ரஜினிகாந்த் பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தாள், ரஜினிகாந்த் 71ஆவது பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் பட்டம், அபூர்வ ராகங்கள், ரஜினி கலைஞானம், கலைப்புலி எஸ்.தாணு கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம், பாலசந்தர், படையப்பா ரஜினி, padaiyappa

ஆனால் அந்தப் பெயர் ரஜினியை விடவில்லை, மக்கள் மனதில் சூப்பர் ஸ்டாராகிவிட்டார் ரஜினி. ‘பைரவி’ படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரஜினியை மக்கள் தூக்கி கொண்டாடியிருக்கிறார்கள்.

தூங்காமல் உழைத்த காலங்கள்

இதன்பிறகுதான் ஆரம்பமாகிறது ரஜினி தூங்காமல் உழைத்த காலங்கள். ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’, ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ என ஒருபுறமும் ‘பில்லா’, ‘ரங்கா’ என மறுபுறமும் வெற்றிநாயகனாக வலம் வரத்தொடங்கினார்.

HBD Superstar Rajinikanth, SUPERSTAR RAJNIKANTH 71ST BIRTHDAY, rajnikanth life, rajinikanth age, rajnikanth bio, apoorva raagangal, Rajni, Rajni movies, rajni kalaignanam, kalaipulli S Dhanu, ரஜினிகாந்த் பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தாள், ரஜினிகாந்த் 71ஆவது பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் பட்டம், அபூர்வ ராகங்கள், ரஜினி கலைஞானம், கலைப்புலி எஸ்.தாணு கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம், பாலசந்தர், petta rajni sitting pose, பேட்ட ரஜினி

மக்கள் அங்கீகரித்த ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறார். இதற்காக பல தடைகளை கடந்துவந்தவர் ரஜினி, அவர் வீழ வேண்டும் என பலரும் காத்துக்கொண்டிருந்தார்கள்.

HBD Superstar Rajinikanth, SUPERSTAR RAJNIKANTH 71ST BIRTHDAY, rajnikanth life, rajinikanth age, rajnikanth bio, apoorva raagangal, Rajni, Rajni movies, rajni kalaignanam, kalaipulli S Dhanu, ரஜினிகாந்த் பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தாள், ரஜினிகாந்த் 71ஆவது பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் பட்டம், அபூர்வ ராகங்கள், ரஜினி கலைஞானம், கலைப்புலி எஸ்.தாணு கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம், பாலசந்தர், பாட்ஷா, baadsha

’பாபா’ திரைப்படம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியபோது, நான் யானையல்ல குதிரை... யானைதான் கீழ் விழுந்தா எழ சிரமம்படும், நான் டப்புனு எழுந்து ஓடிருவேன் என சொன்ன ரஜினி, ‘சந்திரமுகி’ என்ற மெகா ஹிட் படத்தோடு மீண்டு எழுந்தார்.

இது ரஜினி சார் உரசாதீங்க

HBD Superstar Rajinikanth, SUPERSTAR RAJNIKANTH 71ST BIRTHDAY, rajnikanth life, rajinikanth age, rajnikanth bio, apoorva raagangal, Rajni, Rajni movies, rajni kalaignanam, kalaipulli S Dhanu, ரஜினிகாந்த் பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தாள், ரஜினிகாந்த் 71ஆவது பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் பட்டம், அபூர்வ ராகங்கள், ரஜினி கலைஞானம், கலைப்புலி எஸ்.தாணு கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம், பாலசந்தர், Endhiran, எந்திரன்

‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, இரண்டு படம் ஃப்ளாப்பாகிட்டா... அவ்ளோதான் ரஜினி முடிஞ்சுபோச்சு... இததான் 40 வருஷமா சொல்லிட்டிருக்காங்கனு பேசியிருப்பார். நான் ஒரு குழந்தை, என்ன தூக்கி மேக்கப் போட்டு, ஆடவச்சு நீங்களாம் ரசிச்சுட்டு இருக்கிங்க என ரஜினி அடிக்கடி சொல்லுவார்.

தனது கதாபாத்திரத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற மெனக்கெடலும் துடிப்பும் 60 வயதை தாண்டியும் ரஜினியிடம் சற்றும் குறையவில்லை என அவர் உடன் பணியாற்றுபவர்கள். தற்போது 'அண்ணாத்த' வரை அதுதான் நீடிக்கிறது.

HBD Superstar Rajinikanth, SUPERSTAR RAJNIKANTH 71ST BIRTHDAY, rajnikanth life, rajinikanth age, rajnikanth bio, apoorva raagangal, Rajni, Rajni movies, rajni kalaignanam, kalaipulli S Dhanu, ரஜினிகாந்த் பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தாள், ரஜினிகாந்த் 71ஆவது பிறந்தநாள், சூப்பர் ஸ்டார் பட்டம், அபூர்வ ராகங்கள், ரஜினி கலைஞானம், கலைப்புலி எஸ்.தாணு கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம், பாலசந்தர்

திரைத்துறையில் தனது வீழ்ச்சிக்காக காத்திருப்பவர்களுக்கு, இது ரஜினி சார் உரசாதீங்க என தனது முன்னேற்றத்தை பதிலடியாக கொடுத்து இந்திய சினிமா ஆளுமைகளில் முக்கிய நபராக திகழ்கிறார் ரஜினி...

இதையும் படிங்க: 'அவரை நடிக்கச்சொன்னது நான்தான்' - ரஜினியின் நிஜ வாழ்வு 'தேவா' ராஜ் பகதூர் பெருமிதம்

Last Updated :Dec 12, 2021, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.