ETV Bharat / sitara

சன்னி லியோன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

author img

By

Published : Aug 6, 2021, 10:10 AM IST

சன்னி லியோன்
சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன் நாயகியாக நடிக்கும் 'ஷிரோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் உருவாகிவரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம் 'ஷிரோ'. இதில் நாயகியாக நடிகை சன்னி லியோன் நடித்துள்ளனர். இது தொடர்பாக இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் பேசுகையில், "ஷிரோ ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.

சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். விடுமுறையைக் கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகைதருகிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.

சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும், இதில் ஆக்ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. இதற்காக நடிகை சன்னிலியோன் கடுமையாகப் பயிற்சி செய்து, உரிய பாதுகாப்புடன் நடித்தார். மூணாறு, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தபோது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும், உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது" எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நடிகை சன்னி லியோன் கூறுகையில், "ஷிரோ படத்தில் எனது கதாபாத்திரம் சவாலாக இருந்தது. இப்படத்தின் மூலமாகப் பல மொழிகளையும், நடிப்பின் வேறு பரிமாணங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது. கேரளாவின் அழகியல் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. என்னுடைய கலைப் பயணத்தில் நான் நடித்த சுவாரஸ்யமான படங்களில் ஹீரோவும் ஒன்று" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சத்தமில்லாமல் பிரபல சீரியல் நடிகருடன் நிச்சயதார்த்தம் முடித்த செம்பருத்தி ஷபானா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.