'ஸ்குவிட் கேம்' இரண்டாம் பாகம் வருவது நிச்சயம் - இயக்குநர் அறிவிப்பு!

author img

By

Published : Nov 10, 2021, 10:03 PM IST

c
c ()

'ஸ்குவிட் கேம்' வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் குறித்து திட்டமிட்டு வருவதாக அதன் இயக்குநர் ஹ்வாங் டோங்-ஹியூக் தெரிவித்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியான கொரியன் வெப் சீரிஸ் 'ஸ்குவிட் கேம்'. ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கிய இந்த தொடர் குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த வெப் சீரிஸ் 9 எபிசோடுகளாக வெளியானது.

இந்த வெப் சீரிஸ் வெளியான 17 நாள்களில் 111 மில்லியன் பார்வையாளர்கள், இந்தத் தொடரைப் பார்த்து ரசித்தனர். இதனால் 'ஸ்குவிட் கேம்' நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த முதல் தொடராக மாறியது.

ஸ்குவிட் கேம் தொடரின் முதல் விளையாட்டான ரெட் லைட்... கீரின் லைட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காரணம், அதில் ராட்சத பொம்மை. 'ரெட் லைட்' என அந்த பொம்மை கூறிய பின் போட்டியாளர்களிடம் அசைவு தெரிந்தால் அது அவர்களை சுட்டு வீழ்த்தும்.

இதற்கு முன்னதாக 'ப்ரிட்ஜெர்டன்' (Bridgerton) தொடர் குறுகிய நாளில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொடராக முதலிடத்தை வகித்து வந்தது. 'ஸ்குவிட் கேம்' தொடரின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

'ஸ்குவிட் கேம்' தொடரின் நடிகர்கள் லீ ஜங்-ஜே, பார்க் ஹே-சூ, லீ ஜங்-ஜே, இயக்குநர் ஹ்வாங் டோங்-ஹியூக் ஆகியோர் அமெரிக்கா லாஸ் ஏஞ்சலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர்

அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் ஹ்வாங் டோங்-ஹியூக் கூறியதாவது, 'ஸ்குவிட் கேம் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் குறித்து திட்டமிட்டு வருகிறோம்.

அது இன்னும் எழுத்து வடிவம் பெறவில்லை. ஸ்குவிட் கேம் இரண்டாம் பாகம் குறித்தான கதை விவாதம் வரும் நாள்களில் நடைபெறவுள்ளது. அதில் யாரெல்லாம் நடிப்பார்கள் எனத் தெரியாது. ஆனால், முதல் பாகத்தில் நடித்த லீ ஜங்-ஜே (Lee Jung-jae) அதில் நிச்சயம் இருப்பார்.

லாஸ்ஏஞ்சலுக்கு வருவதற்கு முன் தென் கொரியாவில் பலர் ஸ்குவிட் கேம் இரண்டாம் பாகம் குறித்து என்னிடம் கேள்வியெழுப்பினர்.

நாங்களும் சமூக வலைதளங்களில் இந்தத் தொடர் குறித்து ரசிகர்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் கவனித்து வருகிறோம்.

சிலர் சமூகவலைதளங்கள் வாயிலாக இந்த தொடருகான இரண்டாம் பாகம், மூன்றாம் பாகத்திற்கான கதைகளை எனக்கு அனுப்பி வருகின்றனர். அதைப்பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும்’ என்றார்.

இந்த சந்திப்பால் ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாம் பாகம் வருவது உறுதி செய்யப்பட்டும்; அதில் முதல் பாகத்தில் நடித்த சியோங் கி-ஹூன் அதில் இருப்பதும் உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: 10 years of மங்காத்தா - வெங்கட் பிரபு விளையாடிய தரமான கேம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.