ETV Bharat / sitara

ஆகஸ்டில் வெளியாகிறதா 'வலிமை' டீசர்!

author img

By

Published : Jul 17, 2021, 6:30 PM IST

Updated : Jul 17, 2021, 6:36 PM IST

வலிமை
வலிமை

வலிமை திரைப்படத்தின் டீசர் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாகப் படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘வலிமை’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அதிலும் குறிப்பாக மோஷன் போஸ்டர் 10 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று யூ-ட்யூபில் சாதனைப் படைத்தது. இந்நிலையில் ’வலிமை’ படத்தின் டீசர் விடுதலை நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர ‘வலிமை’ திரைப்படம் தீபாவளி பண்டிகையன்று வெளியாகவுள்ளதாகக் கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் செய்தி உலா வருகின்றன.

இதையும் படிங்க: தீபாவளி: மக்களை மகிழ்விக்க களமிறங்கும் சூப்பர்ஸ்டார்-தல?

Last Updated :Jul 17, 2021, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.