ETV Bharat / sitara

'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

author img

By

Published : Apr 23, 2021, 8:55 AM IST

Manadu
Manadu

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட நாள்களாகக் கிடப்பில் போடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவருவதால், ரசிகர்கள் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி படக்குழுவினர் 'மாநாடு' படத்தின் டீசரை வெளியிட்டனர். இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. அப்போது சிம்பு, சக நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரம்ஜான் தினத்தன்று (மே 13) வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.