ETV Bharat / sitara

பென்னிகுயிக் வாழ்க்கை சரிதத்தைப் படமாக்க விரும்பும் இயக்குநர் சீனு ராமசாமி

author img

By

Published : Nov 2, 2021, 5:00 PM IST

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் வாழ்க்கை சரிதத்தைப் படமாக எடுக்க விரும்புவதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

Pennycuick
Pennycuick

தென் தமிழ்நாட்டில் உள்ள தேனி,திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழ்வது, முல்லைப் பெரியாறு அணை.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே இந்த அணையை தனது சொத்துக்களை விற்று கட்டி முடித்தவர், கர்னல் ஜான் பென்னிகுயிக்.

சாமியாக வணங்கப்படும் பென்னிகுயிக்

தென்தமிழ்நாட்டில் 1876-78ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த தாது வருடப் பஞ்சத்தால், கொத்து கொத்தாய் செத்து மடிந்த மக்களின் வாழ்க்கை பசுமையாக மாறியது, முல்லைப் பெரியாறு அணையினால் தான். இதன் காரணமாக தாகம் தீர்த்த தந்தையாக, தென் மாவட்ட மக்களால் இன்றளவும் கர்னல் ஜான் பென்னிகுயிக் தெய்வமாக வணங்கப்படுகிறார்.

இந்நிலையில் பென்னிகுயிக்கின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க விரும்புவதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "வணக்கம். கர்னல் பென்னிகுவிக் வாழ்க்கை சரிதத்தைப் படமாக எடுக்க விழைகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

  • வணக்கம்
    கார்னல் பென்னிகுவிக் வாழ்க்கை சரிதத்தை படமாக எடுக்க விழைகிறேன்.

    — R.Seenu Ramasamy (@seenuramasamy) November 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தப் பதிவையடுத்து நெட்டிசன்கள், சீனு ராமசாமிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சீனு ராமசாமி தற்போது ஜி.வி. பிரகாஷ், காயத்ரி நடிப்பில் 'இடி முழக்கம்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதுமட்டுமல்லாது தான் முன்பே இயக்கி முடித்த 'மாமனிதன்', 'இடம் பொருள் ஏவல்' படங்களை திரையிடுவதற்கான பணிகளையும் சீனு ராமசாமி மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: எத்தியோப்பியாவில் வாழும் மற்றொரு பென்னிகுவிக்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.