ரஜினியை சந்தித்த சசிகலா;பின்னணி என்ன?

author img

By

Published : Dec 7, 2021, 5:19 PM IST

Updated : Dec 7, 2021, 5:36 PM IST

ரஜினி, அவரது மனைவியுடன் உரையாடிய சசிகலா

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினிகாந்தை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று மாலை (டிச.6) சந்தித்து பேசினார். அப்போது ஒன்றிய அரசின் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவரது உடல் நலன் குறித்தும் சசிகலா கேட்டறிந்தார்.

சென்னை : டெல்லியில் அக்டோபர் 25ஆம் தேதி தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இதனையடுத்து நடிகர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மீண்டும் சென்னை திரும்பிய ரஜினி அக்டோபர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், மூளைக்குச் செல்லும் கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.

ரஜினி, அவரது மனைவியுடன் உரையாடிய சசிகலா
ரஜினி, அவரது மனைவியுடன் உரையாடிய சசிகலா

சர்ச்சையை கிளப்பிய சசிகலா

இதனையடுத்து சிகிச்சைக்குப் பின்னர், அக்டோபர் 31ஆம் தேதி ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையிலேயே நடிகர் ரஜினிகாந்தை சசிகலா நேற்று மாலை சந்தித்துள்ளார். முதலில் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்திருந்த சசிகலா, சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொன்விழாவின்போது சென்னையில் நடைபெற்ற விழாவில் கொடியேற்றினார். அப்போது அக்கொடிக்கம்பத்தில் அதிமுக பொது செயலாளர் சசிகலா என பொறிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தேர்தல் தகராறு

பின்னர் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக உள்கட்சித் தேர்தல் தகராறு குறித்து, "இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது" என சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

சமீப காலமாக நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தொண்டர்கள் சந்திப்பு, அறிக்கை வெளியிடுதல் என தொடர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் சசிகலா, ரஜினிகாந்தை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விக்கி கவுஷல் - கத்ரீனா திருமணம்: ராஜஸ்தானில் பரபரப்பு புகார்

Last Updated :Dec 7, 2021, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.