ETV Bharat / sitara

ரஜினிக்கு தங்கையாகிறாரா கீர்த்தி சுரேஷ்?

author img

By

Published : Dec 21, 2019, 11:49 AM IST

keerthy
keerthy

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குநர் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகிவரும் 'தலைவர் 168' திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

'தர்பார்' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்துள்ளார். 'தலைவர் 168' என்ற பெயரில் உருவாகிவரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அஜித்தின் விஸ்வாசம் திரைப்பட வெற்றிக்குப் பின் சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படமும் கிராமத்துக் குடும்ப பின்னணியில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அண்ணன் - தங்கை, அப்பா - மகள், அண்ணன் - தம்பி என குடும்ப பிணைப்பை மையமாக வைத்து சிவா இயக்கிய அனைத்துப் படங்களுமே வசூல் சாதனை படைத்த நிலையில், ரஜினி நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

'தலைவர் 168' படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கவிருக்கும் நிலையில், கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் பற்றிய கூடுதல் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

keerthy
ரஜினிகாந்த் - கீர்த்தி சுரேஷ்

இப்படத்தில் ரஜினியின் சகோதரியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் ரஜினி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ஃப்லிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. அடுத்தாண்டு தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க...

ராமநாதபுரம் இளைஞர்களுக்கு நடிகர் ஆமீர் கான் வழங்கிய அறிவுரை!

Intro:Body:

Rajini 168 movie keerthy suresh role


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.