ETV Bharat / sitara

கரோனா அச்சம்: பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு

author img

By

Published : Jul 13, 2020, 8:41 AM IST

லாஸ் ஏஞ்சல்ஸ்: கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 32ஆவது ஆண்டு பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச திரைப்பட விழா (பி.எஸ்.ஐ.எஃப்.எஃப்) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திரைப்பட விழா
திரைப்பட விழா

உலகப் பெருந்தொற்றான கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மேலும் உலக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகளும் திரைப்பட விழாக்களும் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆஸ்கர் திரைப்பட விழாவும் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து 32ஆவது ஆண்டு பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச திரைப்பட விழாவும் ( Palm Springs International Film Festival) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி விழாவிற்கான திரைப்பட சமர்ப்பிப்புகள் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதியும், திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக நுழைவுச் சீட்டுகள் அக்டோபர் மாதமும் ஃபிலிம்ஃப்ரீவே என்ற இணையதளத்தில் தொடங்கியுள்ளன.

திரைப்பட விழாவின் தேதி மாற்றம் குறித்து விழா அமைப்பாளர்கள் கூறுகையில், “திரைப்பட விழாவிற்கு வரும் விருந்தினர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், பார்வையாளர்கள் ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் எங்களுக்கு மிக முக்கியமானவை. எனவே அவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்குடன் திரைப்பட விழாவின் தேதிகளை மாற்றி உள்ளோம்” என்றனர்.

இதையும் படிங்க: கரோனா அச்சம் வேண்டாம், அலட்சியம் கூடாது: விவேக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.