ETV Bharat / sitara

'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

author img

By

Published : Jan 31, 2022, 6:30 PM IST

'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கியுள்ள 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' திரைப்படமானது வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர்ஆர்ஆர்).

பிரபல தெலுங்கு நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா பரவல் காரணமாக சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில், கரோனா பரவல் காரணமாக 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகவிருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியீடு குறித்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

New release date of RRR movie announced
'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்த நிலையில் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி உலகளவில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த தேதியில் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால், வலிமை அடுத்த மாதம் 24ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் உலவுகிறது. இதனால் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாவதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் பாரதிராஜா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.