ETV Bharat / sitara

கரு.பழனியப்பனின் 'கள்ளன்' ரிலீஸ் எப்போது..?

author img

By

Published : May 21, 2019, 4:53 PM IST

karu palaniappan

பணமதிப்பிழப்பால் முடங்கியிருந்த இயக்குநர் கரு.பழனியப்பன் ஹீரோவாக நடிக்கும் 'கள்ளன்' எனும் புதிய படம் விரைவில் வெளியாகவுள்ளது.

‘பார்த்திபன் கனவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன். அதன் பிறகு ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘சிவப்பதிகாரம்’, ‘மந்திரப்புன்னகை’ உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். ‘மந்திரப்புன்னகை’ படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். சமீபத்தில் வெளியான ‘நட்பே துணை’ படத்தில் நெகட்டிவ் ரோல் ஏற்று நடித்திருந்தார். இதனிடையே ‘கள்ளன்’ என்ற படத்தில் அவர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அந்தப் படம் தற்போது வெளியாகவுள்ளது.

அறிமுக இயக்குநர் சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கள்ளன்’. அரசாங்கம் வேட்டையாட தடைவிதித்த பின்னர் திருட நினைக்கும் ஒரு வேட்டைக்காரன் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் கதை. கரு.பழனியப்பன் வேட்டைக்காரனாக நடிக்கிறார். 1975ஆம் ஆண்டு காலகட்டத்தையும், 1988 - 1989ஆம் ஆண்டு காலக்கட்டத்தையும் படமாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம், மோடியின் பணமதிப்பிழப்பு திட்டத்தால் முடங்கிப்போனது. தற்போது திரைக்கு வர தயாராகியுள்ளது.

தனுஷின் முதல் சர்வதேச திரைப்படம் “பக்கிரி” 


முதன் முதலாக தனுஷ் நாயனாக நடித்திருக்கும் சர்வதேச திரைப்படத்திற்கு விநியோக பங்குதாரராக இணைந்துள்ளது
YNOTX .  

YNOT STUDIOS -ன் சார்பு நிறுவனமான YNOTX, பிராந்திய படங்களை  உலகளாவிய சந்தைபடுத்துதல் மற்றும் விநியோகம் செய்து வருகிறது .  

2009ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரான எஸ். சஷிகாந்தால் துவங்கப்பட்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்.  இதுவரை சுமார் 13 திரைபடங்கள், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் மிகப்பெரிய ஹிட் திரைப்படமான  விக்ரம் வேதா  தற்போது பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், இந்நிறுவனம் கேம் ஓவர் எனும் படத்தை தெலுங்கிலும் தமிழிலும் தயாரித்து வருகிறது.

 தற்போது இந்நிறுவனம்
‘எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ எனும் பிரெஞ்ச்-ஆங்கில படத்தை தழுவி இயக்குனர் கென் ஸ்காட் இயக்கத்தில்,தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் படம் “பக்கிரி”. 

இது குறித்து YNOTX-இன் சஷிகாந்த் கூறுகையில், 

இந்த  கதையை தமிழக ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். பல்வேறு சர்வதேச அங்கீகாரங்களை பெற்ற இத்திரைப்படம், தனுஷ்  இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான அவதாரத்தில்  நடித்த  விதம், சினிமா ரசிகர்களுக்கும், தனுஷின் ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக அமையும் என்றார்.

இது குறித்து தனுஷ் கூறுகையில்,  

,'எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ இந்தியாவிற்கு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதை என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடவும் ஊக்குவிக்கும் என்பதை எனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

அபயானந் சிங், சி ஈஓ, கோல்டன் ரேஷியோ பேசுகையில்,

கோல்டன் ரேஷியோ இத்தகைய சர்வதேச வெளியீடுகள் கொண்ட ஒரு திரைப்டத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி திரைபடங்களுக்கான சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. YNOTX உடன் இணைந்து செயல்படுவது இத்திரைபடத்தை இந்திய திரை ரசிகர்களை சென்றடைய ஒரு ஆகச்சிறந்த வழியாக கருதுகிறோம்.  


இயக்குனர் கென் ஸ்காட் கூறுகையில், 

"எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஒப் தி ஃபகீர்’ ஒரு இகியா துணி அலமாரியில் அடைபட்டு கிடக்கும் ஒரு பகீரின் நீதிக்கதை.  இக்கதை வாய்ப்புகள், கர்மா, மற்றும் சுயவிருப்பங்களை மையமாக கொண்டது. இது மும்பையில் வசிக்கும் ஒரு அண்டை வீட்டு சிறுவன், தன்னை அறிந்து கொள்ளும் நோக்கில் ஐரோப்பாவை சுற்றி வந்த ஒரு எச்சரிக்கை கதை.  

ஒவ்வொரு நாளும் தனுஷ் தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுவதை  பார்த்து பெருமிதம் கொள்கிறேன்.  தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிகர். அவர் காமெடி டச்சுடன் ரசிகர்களை ஈர்க்கும் விதம் அலாதியானது என்றார். 


தமிழில் தனுஷ் நடித்து வெளியாகும் ‘பக்கிரி’, வரும் ஜூன் 21ம் தேதி வெளியிடப்படுகிறது.   


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.