ஜூனியர் என்.டி.ஆரின் மக்கள் தொடர்பாளர் காலமானார்

author img

By

Published : Oct 12, 2021, 3:55 PM IST

மகேஷ் கொனேரு

ஜூனியர் என்.டி.ஆரின் மக்கள் தொடர்பாளரும், தயாரிப்பாளருமான மகேஷ் கொனேரு இன்று (அக்.12) மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

திரைப்பட விமர்சகராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர் மகேஷ் கொனேரு. இவர் 'கான்சே', 'பாகுபலி' உள்ளிட்ட படங்களின் மார்கெட்டிங் செய்யும் குழுவில் பணியாற்றியுள்ளார். ர்.

அதுமட்டுமின்றி 118 படத்தை தயாரித்தும் உள்ளார். மேலும் ஜூனியர் என்.டி.ஆரின் மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் மகேஷ் கொனேரு இன்று (அக்.12) அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் நண்பர் மகேஷ் கொனேரு மரணம் அடைந்து விட்டார். அவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்" என குறிப்பிட்டுள்ளார்.

  • With the heaviest of heart and in utter disbelief, I am letting you all know that my dearest friend @SMKoneru is no more. I am shell shocked and utterly speechless.

    My sincerest condolences to his family and his near and dear. pic.twitter.com/VhurazUPQk

    — Jr NTR (@tarak9999) October 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இவரது தயாரிப்பில் கடைசியாக வெளியான சபகு நமஸ்காரம் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதையும் படிங்க: அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க - அண்ணாத்த டீசர் தேதி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.