ETV Bharat / sitara

நாயகனிலிருந்து இசையமைப்பாளராகும் 'சிவ சிவா' ஜெய்

author img

By

Published : Nov 14, 2020, 6:00 PM IST

சுசீந்திரன் இயக்கத்தில் நாயகனாக நடித்துள்ள ஜெய் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.

jai
jai

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. இப்படத்தில் நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி பரிசாக ரசிகர்களுக்கு படக்குழுவினர் இன்று (நவம்பர் 14) அதிகாலை டீசரை வெளியிட்டனர். இந்த டீசர் சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சுசீந்திரன் ஈஸ்வரன் படத்தை இயக்குவதற்கு முன்பே இரண்டு படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களிலும் ஜெய்யே நாயகனாக நடித்துள்ளார்.

இந்த இரு படங்களின் ஒரு படத்திற்கு 'சிவ சிவா' எனத் தலைப்பு வைத்துள்ளனர். இதன் டைட்டில் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஜெய்க்கு நாயகியாக மீனாட்சி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை அறிமுக தயாரிப்பாளர் ஐஸ்வர்யா லெண்டி ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்கிறார். தனது 30ஆவது படமாக உருவாக இந்தப் படத்தில் ஜெய் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். ஜெய் இசையமைப்பாளர் தேவாவின் உறிவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.