சினிமாவில் ஒரே ஷாட்டில் ஒரு முழு நீளப்படத்தை எடுக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுவருகின்றனர். தமிழிலும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பார்த்திபன் நடிப்பில் பல விருதுகளை வாங்கிய 'ஒத்த செருப்பு' திரைப்படத்தில் அவர் மட்டுமே நடித்தார். ஆனால் இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் இல்லை.
இந்நிலையில், தெலுங்கில் ராஜா தூஸா (Raja Dussa) இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் 'ஒன் நாட் ஃபைவ் மினிட்ஸ் (105)' என்னும் படம் உருவாகவுள்ளது. இப்படத்தை பூமாக் சிவா தயாரிக்கிறார்.
சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகும் இப்படம் ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையம்சத்தை மையமாகக் கொண்டுள்ளது.
இப்படத்தில் ஹன்சிகாவைத் தவிர வேறு யாரும் நடிக்கவில்லை. 105 நிமிடங்கள் ஹன்சிகா தனிமையில் அந்த வீட்டில் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து படமாக உருவாகிறது.
'ஒன் நாட் ஃபைவ் மினிட்ஸ் (105)' படத்தின் மூலம் தெலுங்கில் ஒரே ஷாட்டில் ஒரே கதாபாத்திரம் நடிக்கும் படம் என்ற சாதனையைப் படைக்கவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் ஹன்சிகா கலந்துகொண்டார். சாம் CS இசையமைக்கும் இப்படத்திற்கு கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தயாரிப்பாளர்கள், உலகளவில் ரசிகர்களை ஈர்க்கும் பொருட்டு, இப்படத்தினை உலகிலுள்ள பல நாடுகளின் பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
படத்தினை தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய பிராந்திய மொழிகளல்லாமல் சைனீஸ், கொரியன் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்திய திரையின் மொத்த வரலாற்றில், மூன்றாவது முறையாக, ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகும் படம் எனும் சிறப்பை, இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் 15 நாள் ரிகர்சலுக்கு பிறகு, வெறும் 6 நாட்களில் படமாக்கப்பட்டது.
படத்தில் மொத்தமாக 5 லிருந்து 6 சீக்குவன்ஸ் காட்சிகளே உள்ளது. ஒவ்வொரு காட்சியும் திரையில் 20 நிமிடங்கள் வரை வரும்படி அமைக்கப்பட்டுள்ளது.
இது போல் பல்வேறு சிறப்பு தன்மைகளை பெற்ற ஒரு புதுவித அனுபவத்தை தரும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படத்தினை வெளியிடவுள்ளனர்.
உலகின் பல்வேறு மொழிகளில் வெளியாகும் ஹன்சிகாவின் '105'
ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் ஒரே கதாபாத்திரத்தை வைத்து எடுக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான 'ஒன் நாட் ஃபைவ் மினிட்ஸ் (105)' உலகின் வெவ்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.