ETV Bharat / sitara

இயக்குநர் சங்க தேர்தல் ஜூலை 14ஆம் தேதி தொடக்கம்!

author img

By

Published : Jul 1, 2019, 4:55 PM IST

இயக்குநர் சங்க தேர்தல்

சென்னை: தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் ஜூலை 14ஆம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2019 -2021ஆம் ஆண்டிற்கான தேர்தல் ஜூலை 14ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், ஒரு இணைச் செயலாளர், நான்கு பொருளாளர், ஒரு செயற்குழு உறுப்பினர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் அரங்கில் ஜூலை 14ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும்.

முன்னதாக ஜூன் 27ஆம் தேதி இயக்குநர் சங்க தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடங்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நாளை(ஜூலை-3) வெளியிடப்படுகிறது. மேலும், தேர்தல் நடந்து முடிந்த அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் விதிமுறைகள் சங்க அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் என்றும், தேர்தலைப் பொருத்தவரை தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்நாதன் அறிவித்துள்ளார்.

இதனிடையே, போட்டியின்றி இயக்குநர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிராஜா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதி ராஜா ராஜினாமா கடிதம்
பாரதி ராஜா ராஜினாமா கடிதம்
Intro:தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் 14ஆம் நடைபெற உள்ளது.

Body:தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் 2019 2021 ஆம் ஆண்டிற்கான தேர்தல் வரும் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தலைவர் பதவிக்கு பாரதிராஜா சங்க பொதுக்குழுவில் போட்டியின்றி ஏகமனதாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மற்ற பதவிகளான துணைத்தலைவர்கள் 2 பொதுச் செயலாளர் 1 இணைச் செயலாளர்கள் 4 பொருளாளர் 1 செயற்குழு உறுப்பினர்கள் 12 ஆகிய பதவிகளுக்கு வரும் 14ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது

சென்னை வடபழனி என் எஸ் கிருஷ்ணன் சாலையில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கில் வரும் 14 m தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறவிருக்கிறது .
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

Conclusion:தேர்தல் நடந்து முடிந்த அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் விதிமுறைகள் சங்க அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும். தேர்தலைப் பொருத்தவரை தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.