ETV Bharat / sitara

தனுஷ்- நித்யா மேனன் டான்ஸ்;  லீக்கான படப்பிடிப்பு வீடியோ

author img

By

Published : Sep 6, 2021, 1:57 PM IST

தனுஷ்- நித்யா மேனன்
தனுஷ்- நித்யா மேனன்

'திருச்சிற்றம்பலம்' படத்தின் படப்பிடிப்பில் தனுஷ், நித்யா மேனன் நடனமாடும் வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது.

நடிகர் தனுஷை வைத்து 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' ஆகிய படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர். இவர் தற்போது நான்காவது முறையாக தனுஷுடன் கூட்டணி போட்டுள்ளார்.

தனுஷின் 44ஆவது படமான இதற்கு 'திருச்சிற்றம்பலம்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஆட்டம் போட்ட தனுஷ்- நித்யா மேனன்

'திருச்சிற்றம்பலம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் தொடங்கிய நிலையில் தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பில் தனுஷும், நித்யா மேனனும் மழையில் நடனமாடும் வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது. பள்ளி உடையணிந்து இருவரும் நடனமாடியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதனைக் கண்ட நெட்டிசன்கள், 'துள்ளுவதோ இளமை' படத்தில் வந்த தனுஷ் போலவே இருக்கிறார் என சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.