ETV Bharat / sitara

போட்டியைத் தவிர்த்த சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' - வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு

author img

By

Published : Oct 11, 2021, 1:36 PM IST

Acharya
Acharya

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் 'ஆச்சார்யா' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 152ஆவது படமான 'ஆச்சார்யா' படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார்.

இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கில்தான் படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.

இதற்கிடையில் கரோனா தொற்று அச்சம் காரணமாக நடைபெற்றுவந்த படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு முடிவடைந்தன.

இதற்கிடையில், ஆச்சார்யா டீசரும், ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. இப்படம் இந்தாண்டு மே 13ஆம் தேதி வெளியாக இருந்தது. அப்போது கரோனா பரவல் காரணமாக வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டது.

தற்போது இப்படம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து சிரஞ்சீவி தற்போது மோகன் ராஜா இயக்கத்தில், 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'காட்ஃபாதர்' படத்தில் நடித்துவருகிறார்.

கரோனா பரவல் காரணமாக வெளியிட்டுக்குத் தயாராக இருக்கும் படங்களின் தேதி தற்போது அறிவித்த வண்ணமாக இருக்கிறது. அதன்படி அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா முதல் பாகம்' டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகிறது. ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' 2022ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வெளியாகிறது.

பவன்கல்யாணின் 'பீம்ல நாயக்' திரைப்படம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது. மகேஷ்பாபுவின் 'சர்க்காரு வாரி பாட்டா' சங்கராந்தியை முன்னிட்டு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' திரைப்படம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது. இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இதையும் படிங்க: சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' வெளியீடு தேதி ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.