ETV Bharat / sitara

BB Day 15: எதிர்பாராத நாமினேஷன் பட்டியல்...  எரிச்சலூட்டும் அபிஷேக்

author img

By

Published : Oct 19, 2021, 3:01 PM IST

Updated : Oct 19, 2021, 3:41 PM IST

பிக்பாஸ்
பிக்பாஸ்

பிக்பாஸ் 15 ஆவது நாளில் எதிர்பாராத பல சம்பவங்கள் அரங்கேறியது.

'சென்னை சிட்டி கேங்கஸ்டார்' என்ற பாடலுடன் பிக்பாஸ் மூன்றாவது வாரம் தொடங்கியது. முதல் நாள் என்பதால் என்னவோ தெரியவில்லை ஒருவர் விடாமல் அனைவரும் அனிருத்துடன் பாடலை பாடிக்கொண்டு நடனமாடினர்.

பற்ற வைத்த அக்‌ஷரா

படித்துறை பாண்டி போல் அக்‌ஷராவும், வருணும் சிகப்பு கேட் அருகே அமர்ந்து நியாயம் பேசிக்கொண்டிருந்தனர். அக்‌ஷரா, ''உன்னை நான் காப்பாற்றுவதற்குள் பட்ட கஷ்டம் இருக்கே... உனக்கும், நாடியாவுக்கும் சமமாக வாக்கு விழுந்தது. நான் தான் காப்பாற்றினேன்" என்று பெருமை பேசினார்.

தலைவர் போட்டி

பிக்பாஸின் விதிமுறைகளை கடைப்பிடித்த நான்கு பேர் தலைவர் போட்டியில் கலந்துகொள்கின்றனர். இசைவாணி, சிபி, ராஜு, பவானி ஆகியோரின் பெயர்களை பிக்பாஸ் அறிவிக்கும்போது பார்க்கணுமே, அனைவரின் முகத்திலும் ஒரு கொலை வெறி.

'இவர் தலைவராக வரக் கூடாது' என நினைக்கும் நபர்களிடம் இம்சைகள் செய்து, முகத்தில் ஏதாவது ஒரு உணர்ச்சியை வரவைக்க வேண்டும் என்றார் பிக்பாஸ். பிக்பாஸ் இதை சொன்னவுடன் அபிஷேக் முகத்தில், இப்ப வரேன் பாரு. இதுவரைக்கும் அடக்கி வைத்திருந்தது எல்லாம் டைம் வந்துடுச்சு’னு காண்பிக்க போறேன்" என்று ஆவேசத்துடன் களத்தில் இறங்கினார்.

நகைச்சுவை செய்கிறேன் என இவர்கள் செய்ததை நம்மால் பார்க்கவே முடியவில்லை. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், சந்தானம் சொல்வதைப்போல்.... 'கோபம் வருவது போல் காமெடி செய்யாதே டா' என்று சொல்லிவிடலாம். அபிஷேக், நிரூப் பெண் வேடம் அணிந்து வந்தது, நமக்கே எரிச்சலூட்டும் வகையில் தான் இருந்தது.

அபிஷேக்கின் இம்சை

அபிஷேக் கேங்கான பிரியங்கா, நிரூப் செய்வதைப் பார்த்துத் தாங்க முடியாமல் முதலிலேயே சிரித்து வெளியேறினார் இமான் அண்ணாச்சி. கடைசி வரை பாவனி, ராஜு, சிபி எந்த ஒரு உணர்வும் காட்டாமல் இருக்கின்றனர்.

இவர்களின் இம்சையை பிக்பாஸுக்கே தாங்க முடியவில்லை போல, இது டைபிரேக்கர்க்கான நேரம் என்றார். நீங்கள் இவர்களில் யார் தலைவராக வேண்டும் என விருப்பப்படுகிறீர்களோ, அவர்களின் கழுத்தில் மாலை போட வேண்டும் என்றார். உடனே அனைவரும் சிபிக்கு அதிகமான மாலைகள் கொடுத்து தலைவராக தேர்வு செய்தனர்.

குழந்தைக்கு தலைவர் பதவி

புதிய தலைவராக தேர்வான சிபி, தான் தலைவர் என்பதை மறந்துவிட்டார் போல. இங்கி பிங்கி பாங்கி என்று வீட்டின் அணிகளை பிரித்தார். நீ இங்க போ... நீ இதில் இரு...என அவர் பேசியது குழந்தைக்கு தலைவர் பதவியை ஏன் இவர்கள் கொடுத்தார்கள்? என்று சிந்திக்க வைத்தது.

நாமினேஷனில் சிக்கியவர்கள் எத்தனை பேர்

இரண்டாவது நாமினேஷன் என்பதால் போட்டியாளர்களை விட பார்வையாளர்களான நமக்குத் தான் கொஞ்சம் ஆர்வம் அதிகமாக இருந்தது. கடந்த வாரம் பவானி தவிர மற்ற அனைவரும் நாமினேஷனில் இருந்ததால், கண்டிப்பாக அவர் இந்த முறை டார்கெட் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் பவானி பெயரை மூன்று பேர் கூறினர். அவரை தவிர இந்தமுறை சென்ற வாரம் போல் இல்லாமல் 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

அக்‌ஷரா, பிரியங்கா, அபிஷேக் (இவர் பெயர் இல்லை என்றால் தான் அதிசயம்), சின்ன பொண்ணு, ஐக்கி, இசைவாணி, தாமரை செல்வி, அபினேய் ஆகியோர் நாமினேஷனில் சிக்கியுள்ளனர்.

விதிமீறிய பிரியங்கா

தாங்கள் நாமினேட் செய்தவர்கள் யார் என்பதை வெளியே சொல்லக்கூடாது என்பது பிக்பாஸின் விதி. ஆனால் பிரியங்கா குரூப் மட்டும், தாங்கள் யாரை நாமினேட் செய்தோம் என்று வெளியே சொல்லி சிரித்துக் கொண்டிருந்தனர்.

(கண்டிப்பாக இதைக் கமல்ஹாசன் வார இறுதியில் கேட்பார்)

ராக்கோழிகளின் சேட்டைகள்

நள்ளிரவு தாண்டியும் இந்த பிரியங்கா கேங் தொல்லை தாங்கவே முடியவில்லை. ஷேவிங் க்ரீமை ஒருவர் மேல் ஒருவர் அடித்துக்கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: BB Day 14: எதிர்பார்த்த முதல் எலிமினேஷன்... கமலை ஏமாற்றிய அபிஷேக்

Last Updated :Oct 19, 2021, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.