ETV Bharat / sitara

'காப்பான்' சூர்யாவுக்கு 'பந்தோபஸ்த்' கொடுக்கும் தெலுங்கு ட்ரெய்லர்!

author img

By

Published : Sep 14, 2019, 7:13 PM IST

kappan

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் தெலுங்கு வெர்ஷனான பந்தோபஸ்த் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி, தெலுங்கு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’காப்பான்’. இது கே.வி.ஆனந்த்- சூர்யா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும். தெலுங்கிலும் நடிகர் சூர்யாவுக்கு பெரிய மார்கெட் உள்ளதால், காப்பான் படம் தெலுங்கில் ’பந்தோபஸ்த்’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.

மலையாளத்தின் முன்னணி நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஆர்யா, சாயிஷா, பூர்ணா, சமுத்திரக்கனி என பெரிய நட்சத்திர பட்டாளமே சூர்யாவுடன் இணைந்து காப்பானில் நடித்திருக்கிறது.

இந்நிலையில், படத்தின் தெலுங்கு வெர்ஷனான பந்தோபஸ்த் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரொய்லரானது தமிழில் காப்பான் ட்ரெய்லரை காட்டிலும் முற்றிலும் வேறுபட்டுள்ளது.

தற்போது லைகா நிறுவனம் தனது சமூகவலைதளத்தில் காப்பான் படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை இன்று மாலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

அனைத்து பட வேலைகளும் முடிந்துள்ள நிலையில், காப்பான் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் செப்டம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளிவரவிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.