ETV Bharat / sitara

சிறு தெய்வ வழிபாட்டை நினைவுகூறும் 'வா சாமி' - கவிஞர் அருண் பாரதி நெகிழ்ச்சி

author img

By

Published : Nov 6, 2021, 2:56 PM IST

Vasami
Vasami

சென்னை: 'அண்ணாத்த' படத்தில் “வா சாமி” பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என அப்பாடலை எழுதிய பாடலாசிரியர் அருண் பாரதி தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிப்பில், தீபாவளியன்று, (நவம்பர் 4ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியான படம் 'அண்ணாத்த'. 'சிறுத்தை' சிவா இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.

'அண்ணாத்த' ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் தீம் பாடலான 'வா சாமி' பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Vasami
கவிஞர் அருண் பாரதி

வாசாமி பாடலை பாடலாசிரியரும், கவிஞருமான அருண் பாரதி எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே 'விஸ்வாசம்', 'பிச்சைக்காரன்- 2', 'காக்கி', 'கடமையைச் செய்', 'கார்பன்', 'நா நா' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

'வா சாமி' பாடல் வரவேற்பைப் பெற்றதையடுத்து அருண் பாரதி கூறியதாவது, "'வாசாமி' பாடலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் கிராமங்களில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பெரும் தெய்வங்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் சிறு தெய்வங்களுக்குத் தரப்படுவதில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நம் குல தெய்வங்களுக்கு பாடல் எழுதியது மகிழ்ச்சியளிக்கிறது.

Vasami
கவிஞர் அருண் பாரதி

மறந்து போன சிறு தெய்வ வழிபாட்டை நினைவுகூறும் வகையிலும், வேட்டைக்குச் செல்லும் குலசாமியின் பெருமையைச் சொல்லும் வகையிலும் இந்தப் பாடலை எழுதியுள்ளேன்.

நொச்சிப்பட்டி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதீன் போன்ற மாற்றுத் திறனாளிகளை இந்தப் பாடல் மூலம் அறிமுகம் செய்த இசையமைப்பாளர் இமான் மக்கள் மனதில் பெரும் உயரத்திற்குச் சென்றுவிட்டார்.

இனி கிராமங்களில் கருப்பசாமி, கோவிந்தசாமி, சுடலைமாட சாமி, மதுரை வீரன் சாமி என்று யாருக்கு வழிபாடு நடத்தினாலும் அங்கு இந்த 'வா சாமி' பாடல் நிச்சயம் இடம்பெறும் என்று நம்புகிறேன். மண்வாசத்தோடு கூடிய இந்தப் பாடலை எழுத வாய்ப்பளித்த இயக்குநர் சிவா, இமான் ஆகியோருக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன்" என்றும் கவிஞர் அருண் பாரதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரஜினி,இயக்குநர் சிவா மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் -சௌந்தர்யா ரஜினிகாந்த் விருப்பம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.