ETV Bharat / sitara

ஆர்.ஆர்.ஆர். படப்பிடிப்பில் இணைந்த ஆலியா பட்!

author img

By

Published : Dec 6, 2020, 2:06 PM IST

ஆலியா பட்
ஆலியா பட்

ஹைதராபாத்: நடிகை ஆலியா பட் ’ஆர்.ஆர்.ஆர்.' படப்பிடிப்பில் இன்று (டிச. 06) முதல்முறையாக கலந்துகொண்டுள்ளார்.

பாகுபலி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'ரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர்.ஆர்.ஆர்.). ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படத்தை டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கிற்குப் பிறகு மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் படக்குழு 50 நாள்கள் இடைவெளி இல்லாமல், சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அறிவித்தனர்.

ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பில் இணைந்த ஆலியா பட்
ஆர்.ஆர்.ஆர். படப்பிடிப்பில் இணைந்த ஆலியா பட்

இனையடுத்து தற்போது ஆர்.ஆர்.ஆர். படப்பிடிப்பில் நடிகை ஆலியா பட் முதல்முறையாக இணைந்துள்ளார். காரில் படப்பிடிப்பிற்குச் செல்லும் காணொலியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ”இறுதியாக ஆர்.ஆர்.ஆர். குழுவிற்குச் செல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதையொட்டி ட்விட்டரில் #ALIABHAAT என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.