ETV Bharat / sitara

அஜித் - ஷாலினியின் வைரல் புகைப்படம்!

author img

By

Published : Feb 17, 2021, 8:11 PM IST

Ajith - Shalini
Ajith - Shalini

சென்னை: அஜித் -ஷாலியினின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலினி, தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 'பேபி ஷாலினி' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். பின்னர், அஜித், விஜய், பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையானார். 'அமர்க்களம்' படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் காதல் மலர்ந்தது.

பின்னர், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் அஜித் - ஷாலினி இருவரும் சமீபத்தில் எடுத்த புகைப்படம், தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: 'தல' ராணி ஷாலினிக்கு இன்று 40ஆவது பிறந்தநாள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.