ETV Bharat / sitara

சூர்யாவுடன் விமானத்தில் நிகழ்ந்த உரையாடல் - பகிர்ந்த சனம் ஷெட்டி!

author img

By

Published : Oct 9, 2019, 10:37 AM IST

சூர்யாவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை சனம் ஷெட்டி

மிகவும் எளிமையானவராக திகழ்கிறார் நடிகர் சூர்யா. அவருடன் இணைந்து பயணித்தது மட்டுமல்லாமல் கிராமப்புற கல்வி, என்.ஜி.ஓ. என பல விஷயங்கள் குறித்து நாங்கள் இருவரும் உரையாடினோம் என்று நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

சென்னை: சூர்யாவுடன் இணைந்து விமானத்தில் பயணித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, அவருடன் நிகழ்த்திய உரையாடல் குறித்து தெரிவித்துள்ளார்.

'காப்பான்' படத்தைத் தொடர்ந்து 'சூரரைப் போற்று' படத்தில் பிசியாக நடித்துவருகிறார் நடிகர் சூர்யா. நடிப்பு தவிர தனது அகரம் பவுண்டேஷன் மூலமாகக் கல்விப் பணிகளை செய்துவரும் சூர்யா, ஷுட்டிங் இல்லாத நேரங்கள் அந்தப் பணிகளையும் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் கோவை சென்ற நடிகர் சூர்யா விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார். அப்போது அதே விமானத்தில் நடிகை சனம் ஷெட்டியும் பயணித்துள்ளார். இதையடுத்து சூர்யாவை சந்தித்த சனம், அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Look who is my travel Companion 😍 Actor @Suriya_offl Returns From his hometown Coimbatore.We Spoke About Movies. And His Recent Much needed Speech about the ineffectiveness of Current Education Situation in Rural areas and his NGO.. such a humble Simple man..!! Truly a star🤗❤ pic.twitter.com/Z5IiRXahd3

    — Sanam Shetty (@Sanamshetty_) October 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பின்னர் அவருடன் நிகழ்த்திய உரையாடல்கள் குறித்து சிறு குறிப்பு அளித்தார். அதில், "எனது பயணத் துணையாக நடிகர் சூர்யாவும் வந்தார். நாங்கள் இருவரும் திரைப்படங்கள் பற்றி பேசினோம். மிக முக்கியமாக சமீபத்தில் அவர் பேசிய விஷயமான கிராமப்புற கல்வியின் பயனற்ற நிலைமை குறித்து உரையாடினோம். மேலும் அவர் நடத்திவரும் என்.ஜி.ஓ. பற்றியும் பேசினோம். மிகவும் எளிமையான மனிதர். உண்மையான ஸ்டார் என்பதை நிரூபித்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Simbhu and Sanam Shetty
மஹா பட ஷுட்டிங் இடைவெளியில் சிம்புவுடன், நடிகை சனம் ஷெட்டி

வளர்ந்துவரும் நடிகையாகத் திகழும் சனம் ஷெட்டி தற்போது சிம்புவுடன் இணைந்து 'மஹா' என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் கதையின் நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சனம்.

Intro:Body:

சூர்யாவுடன் விமானத்தில் நிகழ்ந்த உரையாடல்...சனம் பகிர்வு



மிகவும் எளிமையானவராக திகழ்கிறார் நடிகர் சூர்யா. அவருடன் இணைந்து பயணித்தது மட்டுமல்லாமல் கிரம்புற கல்வி, என்ஜிஓ என பல விஷயங்கள் குறித்து நாங்கள் இருவரும் உரையாடினோம் என்று நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளார். 

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.