ETV Bharat / sitara

திருமணம் செய்து கொண்டது துரதிர்ஷ்டவசமான முடிவு -  பூனம் பாண்டே

author img

By

Published : Sep 24, 2020, 3:23 PM IST

பனாஜி: நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம் என்று நம்பி திருமணம் செய்துகொண்டது துரதிர்ஷ்டவசமானது என பூனம் பாண்டே கூறியுள்ளார்.

பூனம் பாண்டே
பூனம் பாண்டே

தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒருசில படங்களில் நடித்தவர் பூனம் பாண்டே.

சமூகவலைதளத்தில் அவ்வப்போது கவர்ச்சி படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த பூனம் பாண்டே, 'லவ் ரோபோட்' என்ற தலைப்பில் ஆடை இல்லாமல் முழு நிர்வாண வீடியோவை வெளியிட்டார். பூனம் பாண்டே கடந்த இரண்டு வருடங்களாக சாம் பாம்பே என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் உலா வந்தன.

இருவருக்கும் ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், செப்டம்பர் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதனை அடுத்து இந்த ஜோடி கோவாவில் தங்களது தேனிலவை கொண்டாடி வந்த நிலையில், கோவா காவல் துறையினரிடம் தன் கணவர் மீது பூனம் பாண்டே புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் சாம் தன்னை அறைந்ததாகவும் தனிப்பட்ட பிரச்னை ஒன்றுக்காக தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பூனம் பாண்டே கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து சாம் பாம்பே காவல் துறையினரால் நேற்று (செப்டம்பர் 23) கைது செய்யப்பட்டிருந்தார்.

நேற்று மாலையே சாம் பாம்பேக்கு, கோவா நீதிமன்றம் ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்து நிபந்தனை பிணை வழங்கியது.

தற்போது பூனம் பாண்டே தன் கணவர் மீது புகாரளித்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.

"எனக்கும் சாமுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அது முற்றிய நிலையில், அவர் என்னை தாக்க தொடங்கினார். கழுத்தை நெறித்தார். அப்போது நான் சாகப் போகிறேன் என தோன்றியது. அதன் பின் அவர் என் முகத்தில் குத்தி என் தலைமுடியை பிடித்து இழுத்து கட்டிலில் என் தலையை மோதினார்.

எப்படியோ அவர் பிடியிலிருந்து விலகி அறையிலிருந்து வெளியேறினேன். இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியபோது அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பின் காவல் துறையினர் வந்து என்னிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு சாமை கைது செய்தனர். நாங்கள் காதலிக்கும் காலத்திலேயே அவரால் நான் தாக்கப்பட்டு பலமுறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளேன். இந்த மோசமான உறவை நான் பொறுத்துக்கொண்டதற்கான காரணம், நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம் என்று நம்பியதுதான். எங்களை எப்போதும் ஒரு சிறந்த ஜோடியாக நான் உருவகித்துக் கொண்டேன்.

அவரது அதீத காதலாலும் பாதுகாப்பின்மையால் கோபம் வெளிப்படும். இவை அனைத்தும் சரியாகும் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது நல்ல முடிவாக இல்லை. காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு நானே சிறந்த உதாரணம்" என பூனம் பாண்டே கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.