கொசுவை அழிக்க ரேடாரை உருவாக்கியது சீனா!

author img

By

Published : Apr 7, 2019, 7:00 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

கொசுக்களால் ஏற்படும் நோய்த்தாக்குதல்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுப்பதற்காக சீன ராணுவம் புதிய ரேடாரை உருவாக்கியுள்ளது.

கொசுவை ஒழிப்பதற்கு ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொசுக்களை ஒழிக்கும் புதிய ரேடார் சாதனம் ஒன்றை சீனா கண்டுபிடித்துள்ளது. ஏவுகணையில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ரேடார் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் உதவியோடு, 2 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கொசுக்களை அறிந்து கொள்ள முடியும். ரேடாரில் இருந்து அதிவேகமாக மின்காந்த அலைகள் வெளியேறும் வகையில் அந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் உதவியால் அந்தக் குறிப்பிட்ட சுற்றளவில் உள்ள கொசுக்களின் பாலினம், அவற்றின் பறக்கும் வேகம், அளவு போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

அதன்மூலம், கொசுக்களின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடமுடியும். மற்ற நாடுகளில் பறவைகள், பெரிய பூச்சியினங்களின் நகர்வுகளைக் கண்காணிக்க பொதுமக்களுக்கான ரேடார் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

news


Conclusion:
Last Updated :Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.