ETV Bharat / premium

வரலாற்று சாதனை படைத்த இமாச்சல பிரதேச தேர்தல்!

author img

By

Published : Nov 12, 2022, 8:07 PM IST

இமாச்சல பிரதேச தேர்தல்
இமாச்சல பிரதேச தேர்தல்

உலகின் மிக உயரமான வாக்குச்சாவடியான தஷிகாங்கில் 98 புள்ளி 85 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 68 இடங்களை கொண்ட இம்மாச்சல பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி சராசரியாக 65.92 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வரும் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் அதுவரை தர்மசாலா மற்றும் சிம்லாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்பில் வைக்கபடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இமாச்சல பிரதேசத்தில் வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான வாக்குச்சாவடியான தஷிகாங்கில் 98 புள்ளி 85 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது. இதுவரை இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து இரு முறை எந்தக் கட்சியும் ஆட்சியைப் பிடித்ததில்லை.

  • Voting in Himachal Pradesh Assembly elections concludes.

    EVMs and VVPATs being sealed and secured at polling booths in Dharamshala and Shimla

    Counting of votes on December 8 pic.twitter.com/PF2wWWhgtD

    — ANI (@ANI) November 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆட்சியை வென்றது போல் தற்போதும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க முனைப்பு காட்டி வருகிறது. இந்த முறையும் ஜெய்ராம் தாக்கூரேவை முதலமைச்சர் வேட்பளராக பா.ஜ.க நியமித்துள்ளது. அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியை கைப்பற்ற போராடி வருகின்றன.

இதையும் படிங்க: 'லவ் டுடே' பிரதீப்பை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.