ETV Bharat / jagte-raho

காவலர் மீது இருசக்கர வாகனத்தை வைத்து மோதிய இளைஞர்கள் கைது!

author img

By

Published : Oct 11, 2019, 10:45 PM IST

Police Arrested Two Youngsters In Kanniyakumari

குமரி: நாகர்கோவிலில் காவல் துறையினர் தலைக் கவச சோதனையின் போது , இரு சக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்த முயன்ற காவலர் மீது, இரு சக்கர வாகனத்தால் மோதி தப்பி ஓடிய இரண்டு இளைஞர்களை கோட்டார் காவல் துறையினர் இருபது நாட்களுக்குப் பின்பு கைது செய்தனர்.

இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே செட்டிகுளம் சந்திப்பில் கடந்த மாதம் 22ஆம் தேதி கோட்டார் காவல் துறையினர் தலைக்கவசம் குறித்து சோதனை நடத்தினர்.

அப்போது, தலைக்கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் தடுத்தும் நிற்காமல், காவலர் மீது இருசக்கர வாகனத்தால் மோதி கீழே தள்ளி, தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் ஆயுதப்படை காவலர் ஒருவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதன்பின் காவல் துறையினர் தப்பி ஓடிய இளைஞர்களைத் தேடி வந்தனர்.

இருபது நாட்களுக்குப் பின்பு கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

தொடர்ந்து, காவல் துறையினரின் இருபது நாள் தேடுதலுக்குப் பின் சுசீந்திரம் அருகே மைலாடியைச் சேர்ந்த சுபாஷ், பிரைட் நிஷ் ஆகிய இரு இளைஞர்களையும் கோட்டார் காவல் துறையினர் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க: '2 பாம்புகள், 16 மரப்பல்லிகள், உடும்புகள்' - பயணி கூடையைத் திறந்து அதிர்ந்த சுங்கத்துறையினர்!

Intro:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனையின் போது, தடுத்த காவலர் மீது இரு சக்கர வாகனத்தால் மோதி தப்பி ஓடிய இரண்டு வாலிபர்களை கோட்டாறு போலிசார் இருபது நாட்களுக்கு பின்பு இன்று கைது செய்தனர். இந்த சம்பவத்தில் போலிசார் படுகாயமடைந்தது சிகிச்சை பெற்று வருகிறார்.Body:tn_knk_02_twoyouth_arrested_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனையின் போது, தடுத்த காவலர் மீது இரு சக்கர வாகனத்தால் மோதி தப்பி ஓடிய இரண்டு வாலிபர்களை கோட்டாறு போலிசார் இருபது நாட்களுக்கு பின்பு இன்று கைது செய்தனர். இந்த சம்பவத்தில் போலிசார் படுகாயமடைந்தது சிகிச்சை பெற்று வருகிறார்.

இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் கடந்த மாதம் 22ம் தேதி கோட்டார் போலிசார் ஹெல்மெட் சோதனை நடத்தினர். அப்போது ஹெல்மெட் இல்லாமல் வேகமாக வந்த இரண்டு வாலிபர்கள் பைக்கில் வந்து போலிசார் தடுத்தும் நிற்காமல் போலிஸ் மீது பைக்கால் மோதி கீழே தள்ளி தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தில் ஆயுதப்படை போலிஸ்காரர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் போலீசார் தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வந்தனர். இருபது நாள் தேடுதலுக்கு பின் போலிஸ் மீது தப்பி ஓடிய சுசீந்திரம் அருகே மைலாடியை சேர்ந்த சுபாஷ், பிரைட் நிஷ் ஆகிய இரு வாலிபர்களையும் கோட்டாறு போலீசார் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.