ETV Bharat / jagte-raho

டாஸ்மாக் சூப்பர்வைசர் வீட்டில் 34 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் பணம் கொள்ளை!

author img

By

Published : Oct 4, 2019, 10:29 PM IST

Tasmac Superviser House Jewel Theft

அரியலூர்: டாஸ்மாக் சூப்பர்வைசர் வீட்டில் 34 பவுன் நகையையும், ரூ.30ஆயிரம் ரொக்க பணத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் ஸ்ரீமுஷ்ணம் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று பணியின் காரனமாக, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்திற்கு சென்றுவிட்டார்.

இவரது மனைவி உறவினர் வீட்டு துக்க காரியத்திற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துகொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பீரோவை உடைத்து அதில் இருந்த 34 பவுன் நகைகள்,ரூ. 30 ஆயிரம் பணம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர்.

Tasmac Supervisor Home Jewel Theft In Ariyalurநகை கொள்ளையடிக்கப்பட்ட வீடு

பின்னர் இதுகுறித்து காவல் துறையினருக்கு ராமச்சந்தினர் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து ஜெயங்கொண்டம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து, பெரம்பலூரில் இருந்து மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் ஓடி திரும்பியது.

பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

34 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் கொள்ளை
Intro:
அரியலூர் - ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசர் வீட்டில் 34 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை.Body:அரியலூர் 04.10.19
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் ஸ்ரீமுஷ்ணம் டாஸ்மார்க் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று பணிக்கு செல்வதற்காக, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்திற்கு சென்றுவிட்டார். இவரது மனைவி உறவினர் வீட்டு துக்ககாரியத்திற்கு சென்று விட்டார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பீரோவை உடைத்து அதில் இருந்த 34 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் 30 ஆயிரம் பணம் உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடித்து சென்று விட்டனர். தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து பெரம்பலூரில் இருந்து மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஓடி திரும்பி சென்றது. இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் சோதனையிட்டனர்.
Conclusion:இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.