ETV Bharat / jagte-raho

“எனது மனைவியை தொந்தரவு செய்ய வேண்டாம்”, ரமேஷின் உருக்கமான கடிதம் சிக்கியது.!

author img

By

Published : Oct 13, 2019, 11:01 AM IST

KARNATAKA IT RAID

பெங்களுரு: வருமான வரித்துறை அலுவலர்கள், “என்னிடம் கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்தது போல், எனது மனைவியை தொந்தரவு செய்ய வேண்டாம்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.பரமேஸ்வரின் உதவியாளர் ரமேஷ் கடிதம் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

தற்கொலை
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜி. பரமேஸ்வரின் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் ரமேஷ். ராமன்நகர் மேலேஹள்ளி பகுதியை பூர்வீகமாக கொண்ட இவர், தனது மனைவி சௌமியாவுடன் மலதஹள்ளி பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனபாரதி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியப்படி ரமேஷ் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் மரணித்த இடத்திற்கு கீழே கடிதம் ஒன்றும் சிக்கியது.

கடிதம்
அந்த தற்கொலைக் கடிதத்தில், வருமான வரித்துறை கொடுத்த அழுத்தம் காரணமாக தாம் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு இருந்தது. ரமேஷின் மரணம், கர்நாடக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ரமேஷின் கடைசி நிமிடங்கள் உருக்கமானவை. கடும் மன அழுத்தத்தில் இருந்த ரமேஷ், தனது நெருக்கிய நண்பர்கள் இரண்டு பேரை செல்போனில் தொடர்புக் கொண்டு பேசியுள்ளார்.

உருக்கமான உரையாடல்
அப்போது, “வருமான வரித்துறையின் நடவடிக்கை தமக்கு பயத்தை அளிக்கிறது. நான் தற்கொலை செய்யப் போகிறேன்” என்று கூறி விட்டு உடனடியாக செல்போன் இணைப்பை துண்டித்து விட்டதாகவும், மீண்டும் அவரை செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயன்றபோது, முடியவில்லை என தெரிவித்தனர்.

வேண்டுகோள்
ரமேஷின் தற்கொலைக்கு வருமான வரித்துறை அலுவலர்கள் தான் காரணம் என அவரின் மரணத்தக்கு நீதி வேண்டும் என அவரின் சகோதரர் லாமண்ட் சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரமேஷ் தனது தற்கொலைக் கடிதத்தில், வருமான வரித்துறை அலுவலர்கள் தனது மனைவியை தொந்தரவு செய்யக் கூடாது எனவும் கூறியுள்ள்

வருமான வரித்துறை விளக்கம்
இதுதொடர்பாக வருமான வரித்துறை அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அந்த விளக்கத்தில், ஜி.பரமேஸ்வரின் வீட்டில் ரெய்டு நடந்த போது, ரமேஷ் அங்கு நின்றார்.
எனினும் இதுதொடர்பாக அவரிடம் எந்த விளக்கமும் வருமான வரித்துறை கோரவில்லை. அவரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அதேபோல் அவரது வீட்டிலும் எவ்வித சோதனைகளும் நடைபெறவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.பரமேஸ்வர் வீடு, கல்வி நிறுவனங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.9 ஆயிரம் கோடி மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Intro:Body:

KARNATAKA IT RAID UPDATE


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.