ETV Bharat / jagte-raho

இந்து மகா சபா மாநிலத் தலைவர் மீது பாலியல் புகார்

author img

By

Published : Jan 9, 2020, 12:10 AM IST

Updated : Jan 9, 2020, 8:08 AM IST

சென்னை: இந்து மகா சபா மாநிலத் தலைவர் மீது அக்கட்சியின் பெண் மாநிலச் செயலாளர் கொடுத்த பாலியல் புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

lady molested case  bjp Mahasaba president arrested  இந்து மகாசபா தலைவர் கைது
lady molested case bjp Mahasaba president arrested இந்து மகாசபா தலைவர் கைது

சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் இந்து மகா சபாவின் மாநில அலுவலகம் இயங்கிவருகிறது. இந்தக் கட்சியின் தலைவராகப் பதவி வகித்துவருபவர் ஸ்ரீகண்டன் (50). அக்கட்சியில் 2016ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது நிரம்பிய பெண் ஒருவர் மகளிர் பிரிவில் மாநிலச் செயலாளராக இணைந்துள்ளார்.

அதன்பின்னர் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தார். இச்சூழலில் அக்கட்சியின் தலைவர் ஶ்ரீகண்டனுடன் அப்பெண், கட்சிப் பணிகளுக்காக பல இடங்களுக்குச் சென்றுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஶ்ரீகண்டனுக்கு மொழி பிரச்னை இருப்பதால், வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது, இவரையும் உடன் அழைத்துச் சென்றுவந்ததாகவும் தெரிகிறது. அதற்கான தரகுத் தொகையும் இப்பெண்ணுக்கு கொடுப்பதாக ஶ்ரீகண்டன் வாக்குக் கொடுத்துள்ளார்.

lady molested case  bjp Mahasaba president arrested  இந்து மகாசபா தலைவர் கைது
முதல் தகவல் அறிக்கை

ஶ்ரீகண்டனின் பேச்சை நம்பி அவருடன் கட்சிப் பணிகளுக்கு பல இடங்களுக்குச் சென்றுள்ளார். அதனைப் பயன்படுத்திக் கொண்டு தனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மேலும் தன்னைத் திருமணம் செய்துகொள்ள ஸ்ரீகண்டன் வற்புறுத்தியதாகவும் அப்பெண் குற்றஞ்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து கட்சிப் பணிகளிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார் எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தன்னைக் குறித்து குடும்பத்தினரிடம் அவதூறு கருத்துகளைப் பரப்பிவருவதாகப் புகார் தெரிவித்த அப்பெண், தன்னைக் கட்சியில் திரும்ப இணைந்துகொள்ளச் சொல்லி ஶ்ரீகண்டன் கொலைமிரட்டல் விடுப்பதாகவும் கூறி தற்போது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

மேலும், அப்புகாரில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் இதனால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார். இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:

தமிழ்நாடு முழுவதிலும் மத்திய தொழிற்சங்கத்தினர் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

Intro:Body:பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கூறி அனைத்திந்திய மகாசபாவின் தலைவர் மீது அக்கட்சியின் பெண் மாநில செயலாளர் புகார்.

சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் அனைத்திந்திய இந்து மகாசபாவின் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்சியின் அனைத்திந்திய தலைவராக பதவி வகித்து வருபவர் ஸ்ரீகண்டன்(50).

இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பெண்மணி நிரஞ்சனி(40) பெயரை மாற்றவும்,இவர் அனைத்திந்திய இந்து மகாசபாவில் மகளிர் பிரிவில் மாநில செயலாளராக கட்சியில் இணைந்துள்ளார்.பின்னர் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு கூறி வந்துள்ளார்.


பின்னர் அக்கட்சியின் தலைவராக உள்ள ஸ்ரீகண்டனிடம் பழக்கம் ஏற்பட்டதாகவும்,பின்னர் அவர் கட்சி சார்பாக டெல்லி செல்வதாகவும்,அவருக்கு மொழி பிரச்சனை உள்ளதால் என்னுடன் வருமாறு அழைத்தார்.மேலும் இதற்கு உண்டான கமிஷன் தொகையையும்,வரவு செலவுகளையும் தருவதாக அவர் தெரிவித்தார்.இதனை நம்பி சென்றதாகவும் நாளடைவில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும்,கல்யாணம் செய்ய விரும்புவதாக கூறி தன்னை வற்புறுத்தினார்.. இதனால் வேலையை பாதிக்கப்பட்ட பெண் ராஜினாமா செய்துள்ளார்.ஆனால் தனது குடும்பத்தினரிடம் தன்னை பற்றி இழிவான கருத்துகளை ஸ்ரீகண்டன் பரப்பி வருகின்றார்.

மேலும் மறுபடியும் வேலையில் சேர சொல்லி தனது தம்பி மற்றும் குடும்பத்தினரிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.மேலும் அவர் பல சட்ட விரோத செயலில் ஈடுப்பட்டு வருவதாகவும்,தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீகண்டன் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Conclusion:
Last Updated : Jan 9, 2020, 8:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.