அமெரிக்காவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

author img

By

Published : Feb 7, 2023, 11:35 AM IST

மசோதா

அமெரிக்கா உடா மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை மற்றும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

நியூயார்க்: உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை விமரிசையாக கொண்டாடி வந்தாலும் அந்ததந்த நாடுகளில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டே கொண்டாடும் சூழல் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா உடா மாகாணத்தில் தீபாவளிக்கு பொது விடுமுறை மற்றும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை அளிப்பது மற்றும் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி அளிக்கும் மசோதா அமெரிக்கா உடா மாகாண செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

46 ஆதரவு வாக்குகள் கிடைத்த நிலையில், ஒரு மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டதாக செனட் சபை உறுப்பினர் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இந்த மசோதாவில் தீபாவளி பண்டிகையை மாநில பொது விடுமுறை பட்டியலுக்குள் கொண்டு வருவது மற்றும் பட்டாசு விற்க மற்றும் வெடிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பான கருத்துகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாத இறுது அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதன் ஒட்டிய காலத்தில் 5 நாட்கள் பட்டாசு வெடிப்பது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு தீபாவளிக்கு பொது விடுமுறை அளிக்கும் சட்டம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: JEE MAIN 2023 : ஜெஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.