இலங்கை புத்த பிட்சு மீது தாக்குதல்.. 8 பேர் கைதானதன் பின்னணி என்ன?

author img

By

Published : Jul 9, 2023, 8:11 AM IST

Etv Bharat
Etv Bharat ()

இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொழும்பு: இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு, பல்லேகம சுமன தேரர். இவர் இலங்கையில் உள்ள நவகமுக என்னும் பகுதியில் அமைந்து உள்ள தனியார் ஓட்டல் அறை ஒன்றில், தாய் மற்றும் அவரது மகள் உடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புத்த பிட்சு பல்லேகம சுமன தேரர் தங்கி இருந்த அறைக்குள் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென நுழைந்து உள்ளது.

இதனையடுத்து இந்த 8 பேர் கொண்ட கும்பல் புத்த பிட்சு, அங்கு இருந்த தாய் மற்றும் அவரது மகளையும் தாக்கி உள்ளது. மேலும் புத்த பிட்சுவையும், இரு பெண்களையும் நிர்வாணமாக்கியும் அவர்கள் தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் தற்போது இலங்கையில் பேசு பொருளாக மாறி உள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய புத்த பிட்சு பல்லேகம சுமன தேரர், இலங்கை அரசியல் பிரமுகர்கள் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார்.

குறிப்பாக, ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜ பக்சே ஆகியோருக்கும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். இந்த தாக்குதல் சம்பவத்தில் புத்த பிட்சு மற்றும் இரண்டு பெண்கள் காயம் அடைந்து உள்ளனர். பின்னர் காயம் அடைந்த 2 பெண்கள் மற்றும் புத்த பிட்சு ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புத்த பிட்சு உள்பட அங்கு இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்திய 8 பேரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்ரை ஏற்படுத்தி உள்ளது. மேலும், புத்த பிட்சுவை தாக்கியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

எனவே, இது தொடர்பான வீடியோக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்து உள்ளது. அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை சமூக வலைதள பக்கங்களில் இருந்து இலங்கை அரசு நீக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சீனாவிடம் சுதந்திரம் கேட்கவில்லை... அங்கமாகவே தொடர விருப்பம்... தலாய்லாமா திடீர் பல்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.