சீனாவில் உணவகத்தில் தீ விபத்து - 17 பேர் உயிரிழப்பு 3 பேர் படுகாயம்

author img

By

Published : Sep 28, 2022, 7:11 PM IST

Restaurant fire kills 17 people

சீனாவில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெய்ஜிங்: சீனாவில் உள்ள சாங்சுன் நகரில் வணிக வளாகம் ஒன்றில் உள்ள உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். இதில், 3 பேர் படுகாயமடைந்ததாகவும், 17 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வீரர்கள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:"போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை தாக்க வேண்டாம்" - ஈரான் அரசுக்கு ஐ.நா. வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.