ETV Bharat / international

கிளர்ச்சி திட்டம் முறியடிப்பு - நாட்டின் ஒற்றுமைக்கு ரஷ்ய அதிபர் புடின் நன்றி!

author img

By

Published : Jun 27, 2023, 11:23 AM IST

Putin thanks nation for unity after aborted rebellion
கிளர்ச்சி திட்டம் முறியடிப்பு - , நாட்டின் ஒற்றுமைக்கு அதிபர் புடின் நன்றி!

24 மணி நேரத்திற்குள், இந்த கிளர்ச்சி முயற்சி கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஜூன் 26ஆம் தேதி, நாட்டின் ஒற்றுமைக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

மாஸ்கோ: ரஷ்யா மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில், கடந்த வார இறுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சி தொடங்கியது. 24 மணி நேரத்திற்குள், இந்த கிளர்ச்சி முயற்சி கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஜூன் 26ஆம் தேதி, நாட்டின் ஒற்றுமைக்கு நன்றி தெரிவித்து உள்ளார். அதற்கு முன்பு, வாக்னர் , கூலிப்படைத் தலைவர் தனது குறுகிய கால கிளர்ச்சியை ஒரு பெருமைமிக்க நிகழ்வாக தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். கிளர்ச்சி முயற்சி கைவிடப்பட்டு உள்ள நிலையில், இந்த அசாதாரண நிலையை, மோசமானதாக மாற்ற முயற்சிக்காத, கூலிப்படையினருக்கும், இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக, அதிபர் புடின் குறிப்பிட்டு உள்ளார்.

ரஷ்ய அதிபர் புடின் மேலும் தெரிவித்து உள்ளதாவது, கிளர்ச்சியில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. ரஷ்யாவின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் எதிரிகளை குற்றம் சாட்டி உள்ள புடின், அவர்கள் தங்களை தவறாகக் கணக்கிட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர், உக்ரைனில், தங்கள் நாட்டின் படைகளை மதிப்பாய்வு செய்யும் வீடியோவை அதிகாரிகள் ஜூன் 26ஆம் தேதி வெளியிட்டபோது, கிரெம்ளினும் பாதுகாப்புத் தன்மை பலப்படுத்தப்பட்டு இருந்ததாக, அவர் மேலும் குறிப்பிட்டு உள்ளார்.

தனியார் இராணுவ அமைப்பாகிய வாக்னர் கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸின் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தாங்கள், ரஷ்ய நாட்டிற்கு எதிராக, எந்தவொரு கிளர்ச்சியையோ அல்லது சதிப்புரட்சியையோ நடத்த முற்படவில்லை. எங்களை, ரஷ்ய ராணுவம் அழிக்க முற்பட்டதாலேயே, நாங்கள் அணிவகுப்பு மேற்கொண்டதாக, ப்ரிகோஸின் குறிப்பிட்டு உள்ளார். ப்ரிகோஸின் தற்போது எங்கு உள்ளார், அவரின் திட்டங்கள் என்ன, என்ற எந்த விவரங்களும், இதுவரை வெளியிடப்படவில்லை.

வாக்னர் குழுமத் தலைவருக்கும் ரஷ்யாவின் இராணுவத் தளபதிக்கும் இடையிலான பகை போர் முழுவதுமாகப் பரவி, வார இறுதியில் ஒரு கலகமாக வெடித்தது. கூலிப்படையினர் உக்ரைனில் இருந்து தெற்கு ரஷ்ய நகரத்தில் உள்ள இராணுவத் தலைமையகத்தைக் கைப்பற்றினர். ஜூன் 24ஆம் தேதி, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில், மாஸ்கோவை நோக்கிய இந்த கிளர்ச்சி முயற்சி, கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாக்னர் குழுத் தலைவர் ப்ரிகோஸின், பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்து, அங்கு பொது மன்னிப்பைப் பெறும் பொருட்டு, தனது வீரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளதாக கிரெம்ளின் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 26ஆம் தேதி வரை, ப்ரிகோஸின் எங்கு உள்ளார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், பிரபலமான ரஷ்ய செய்தி சேனல் தனது டெலிகிராம் பக்கத்தில், ப்ரிகோஸின் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் உள்ள ஒரு ஹோட்டலில் இருப்பதாக தெரிவித்து உள்ளது.

2022ஆம் ஆண்டில், ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்த சமயத்தில், ரஷ்யாவின் நடவடிக்கைகள் எவ்வாறு, இருந்திருக்க வேண்டும் என்பதை காட்டவே, இந்த அணிவகுப்பை நடத்திக் காட்டியதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். இதன்மூலம், ப்ரிகோஸின், ரஷ்யாவின் ராணுவத்தை கேலி செய்ததுடன், ரஷ்யாவைப் பாதுகாக்கத் தவறியதற்காக, அந்நாட்டு ராணுவம் மீது குற்றமும் சுமத்தி உள்ளார். பாதுகாப்பு மீறல்களைச் சுட்டிக்காட்டி, வாக்னர் எதிர்ப்பை எதிர்கொள்ளாமல் 780 கிலோமீட்டர்கள் (500 மைல்கள்) மாஸ்கோவை நோக்கி அணிவகுத்துச் செல்ல அனுமதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெலாரஸ் நாட்டின் ஜனாபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் தரகர் என்று கூறப்படும் ஒப்பந்தத்தின் கீழ் ப்ரிகோஸினுக்கும் அவரது படைகளுக்கும் இறுதியில் என்ன நடக்கும் என்பதை இந்த நேர்மறை அறிக்கை தெளிவுபடுத்தப்படவில்லை.

லுகாஷென்கோ, வாக்னர் தனியார் இராணுவ நிறுவனத்திற்கு சட்டப்பூர்வ அதிகார வரம்பில் அதன் பணியைத் தொடர தீர்வுகளைக் கண்டறிய முன்மொழிந்தார் என்று பிரிகோஸின் தரப்பு தெரிவித்து உள்ளது. ப்ரிகோஸின் தனது இராணுவப் படையை வைத்திருக்கலாம் என்று அது பரிந்துரைத்துள்ள நிலையில், அவர் எந்த அதிகார வரம்பைக் குறிப்பிடுகிறார் என்பது உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: ஆசியாவின் முதல் பெண் அரசுப் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரியின் ‘நச்’ அட்வைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.