ETV Bharat / international

ட்விட்டர் தலைமையகத்தில் 'X' லோகோ: அனுமதி மீறல் குறித்து விசாரணை!

author img

By

Published : Jul 29, 2023, 3:44 PM IST

Etv Bharat
Etv Bharat

ட்விட்டர் தலைமையகத்தில் 'X' லோகோ வைத்தது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோ: டிவிட்டரின் நீலப் பறவை லோகோவை மாற்றி X என்ற லோகவை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க் அதன் தலைமையக கட்டிடமான டவுன்டவுன் கட்டிடத்தின் மீது X லோகோவை நிறுவியுள்ளார். இது அனுமதி மீறல் எனக்கூறியுள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு 44 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொடுத்து டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். அதனைத் தொடர்ந்து, டிவிட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வரும் அவர், டிவிட்டர் ஊழியர்கள் பலரை பணியிலிருந்து நீக்கம் செய்தார்.

அது மட்டுமின்றி, ப்ளூ டிக் பெறுவதற்குப் பயனர்கள் 8 டாலர் சந்தா செலுத்த வேண்டும், நாளொன்றுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்வீட் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டார்.

இதையும் படிங்க: ஆறு வழக்குகளை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய இம்ரான் கான் மனு தள்ளுபடி!

அதனைத் தொடர்ந்து டிவிட்டரின் நீலப் பறவை லோகோவை மாற்றவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த எலான் மஸ்க் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ட்விட்டர் லோகோவை கருப்பு நிற X-ஆக மாற்றியுள்ளார். இதற்குப் பலரும் மாறுபட்ட கருத்துக்களைப் பதிவு செய்து வரும் நிலையில் அவர் டவுன்டவுன் கட்டிடத்தின் மீது X லோகோவை பொருத்தியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள சான் பிரான்சிஸ்கோ அதிகாரிகள், "கட்டிடத்தின் மீது X லோகோ வைக்க அனுமதி பெறவில்லை எனவும், விதிகளுக்கு முரனான லோகோவை எலான் மஸ்க் நிறுவி இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் கட்டிடத்தின் மேலே இருந்து லோகோ கீழே விழவது போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் அது பொதுமக்களைப் பாதிக்கும் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இந்த லோகோவை அங்கு நிறுவுவதற்குத் திட்டமிடல் மதிப்பாய்வு மற்றும் ஒப்புதல் அவசியமாக உள்ள நிலையில், கட்டிட ஆய்வுத் துறையின் செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ஹன்னன் கூறியுள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

X என்ற எழுத்தால் ஈர்க்கப்பட்டுள்ள எலான் மஸ்க், கடந்த ஜூலை 12ஆம் தேதி xAI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தைத் தொடங்கி இருந்த நிலையில் தனது டிவிட்டர் லோகோவையும் அவர் X என மாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டிவிட்டர் லோகோவை நீலப் பறவை வடிவத்தில் மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட அதன் பயனர்கள் திடீரென இந்த X லோகோவை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பலரும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரு லட்சம் ஆண்டுகளில் இல்லாத வெப்ப அலை பதிவானது.. உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தில் அதிர்ச்சி ரிப்போர்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.