ETV Bharat / international

கென்யாவில் 205 யானைகள், 381 வரிக்குதிரைகள் உயிரிழப்பு

author img

By

Published : Nov 5, 2022, 4:18 PM IST

கென்யாவில் வரலாறு காணாத வறட்சி
கென்யாவில் வரலாறு காணாத வறட்சி

ஆப்பிரிக்காவின் கென்யாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வன உயிரினங்களின் உயிரிழப்பு அதிகரித்துவருகிறது.

நைரோபி: கிழக்கு ஆப்பிரிக்காவில் 40 ஆண்களில் இல்லாத கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கென்யாவில் உள்ள தேசிய பூங்காக்கள் மற்றும் அம்போசெலி, சாவோ, லைக்கிபியா சம்பூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் உயிரிழப்பு அதிகரித்துவருகிறது. அந்த வகையில், கடந்த 9 மாதங்களில் மட்டும் 205 யானைகள், 512 காட்டெருமைகள், 381 வரிக்குதிரைகள், 51 எருமைகள், 49 கிரேவி இன வரிக்குதிரைகள், 12 ஒட்டகச்சிவிங்கிகள் உயிரிழந்துள்ளன.

இந்த தரவுகள் எல்லாம் தேசிய பூங்காக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மட்டுமே கணக்கிடப்பட்டவை. முழு விவரங்கள் கிடைக்கவில்லை என்று கென்யா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கென்யாவில் பல லட்சக்கணக்காண சதுர கிலோ மீட்டர் சதுப்புநில காடுகளும், வெப்ப மண்டல மழைக்காடுகளும், சவன்னா காடுகளும் உள்ளன. அதோபோல பல்லாயிரக்கணக்கான யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் லட்சக்கணக்காண வரிகுதிரைகள், எருமைகள் உள்ளன.

இதையும் படிங்க: செட்செ என்னும் ஆப்ரிக்க ஈ வகையினைக்கொண்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள முதல் மாதிரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.