ETV Bharat / international

ஃபிஃபா: அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா - குரோஷியாவை எதிர்கொள்கிறது

author img

By

Published : Dec 10, 2022, 10:04 AM IST

அர்ஜெண்டினா
அர்ஜெண்டினா

பரபரப்பான கால் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா அணி, அரையிறுதியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது.

தோஹா(கத்தார்): ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் லுசைல் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்து உடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி வீரர் மொலினா 35-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலை வகித்தது.

இதனையடுத்து ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் மெஸ்ஸி 2-வது கோலைப் பதிவு செய்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நெதர்லாந்து அணி வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83 மற்றும் 93+11 நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அர்ஜென்டினா அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

இதனையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. கூடுதல் நேரத்தின் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலை ஆனதால் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. அதே சமயம் நெதர்லாந்து 4 வாய்ப்புகளில் 1-ஐ வீணடித்தது. பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியைை வீழ்த்தி அரைஇறுதி சுற்றுக்குள் நுழைந்தது. அர்ஜென்டினா அணி அரையிறுதி சுற்றில் குரோஷியாவை எதிர்கொள்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.