ETV Bharat / international

மன்னரின் படத்தை வெளியிட்டு வதந்திகளைக் களைய முற்படும் சவூதி!

author img

By

Published : Mar 8, 2020, 11:34 PM IST

saudi king salman
saudi king salman

ரியாத்: சவூதி மன்னர் சல்மானின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வதந்தி பரவிவரும் நிலையில், அவர் பணிபுரிவது போன்ற புகைப்படங்களை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

சவூதியில் மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் தலைமையில் மன்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக மன்னரின் இளைய சகோதரரும், இளவரசருமான அகமது பின் அப்துல்லாசிஸ், மருமகன் முகமது பின் நயீஃப் என ராஜ குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்தச் செய்தி உலக அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, 84 வயதான மன்னர் சல்மான் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும், அதிகாரப் பிடியை இறுக்கிவரும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் மன்னராக உள்ளார் என்றும் பேச்சு எழுந்தது.

இந்த வதந்திகளைக் களையும் நோக்கில், மன்னர் சல்மான் அலுவலகத்தில் பணி செய்வது போன்ற படங்களை சவூதி அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்தப் படங்கள், உக்ரைன், உருகுவே நாடுகளுக்குச் செல்லும் இரண்டு சவூதி தூதர்களின் பதவிப் பிரமாணத்தை மன்னர் சல்மான் மேற்பார்வையிடுவது போன்று காட்சி அமைந்துள்ளது.

"மன்னர் நலமாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளார். ராஜ குடும்பத்தினர் இடையே ஒழுக்கத்தை கொண்டுவரவே அந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்" எனச் சவூதி அரசுக்கு நெருக்கமான ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஆட்சியைக் கவிழ்க்க சதி - சவூதி ராஜ குடும்பத்தினர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.