ETV Bharat / international

அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாதிகளாக்கும் சட்டம் - ஈரான் அதிபர் ஒப்புதல்

author img

By

Published : Jan 13, 2020, 10:30 PM IST

blacklisting Pentagon
blacklisting Pentagon

தெஹ்ரான்: அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் சட்ட திருத்தத்திற்கு ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை அமெரிக்கா பயங்கரவாதிகளாக அறிவித்ததையடுத்து, கடந்த ஏப்ரல் 2019ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் CENTCOM-ஐ (Central Command) பயங்கரவாதிகளாக அறிவிக்கும் சட்டத்தை ஈரான் நிறைவேற்றியிருந்தது.

இந்தச் சட்டத்தில், அமெரிக்கா ராணுவத்தின் தலைமையிடமான பென்டகனை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் புதிய சட்ட திருத்தத்தை ஈரான் நாடாளுமன்றம் மேற்கொண்டது.

இந்தச் சட்டத்திருத்தம் மொத்தமுள்ள 233 உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்திற்கு ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

புதிய சட்டத்தின்படி, அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகன் மற்றும் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியின் மரணத்துக்கு காரணமான அனைவரையும் பயங்கரவாதிகளாக ஈரான் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஈரானில் காவல் துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.