ETV Bharat / international

அமெரிக்க போர் கப்பலை ஜர்க் ஆக்கிய ரஷ்யா!

author img

By

Published : Jan 11, 2020, 12:07 PM IST

Russia navy Ship
Russia navy Ship

வாஷிங்டன் : அரபிக் கடலில் சர்வதேச விதிகளை மீறி ரஷ்யப் போர் கப்பல் ஒன்று, அமெரிக்கப் போர் கப்பலுக்கு மிக அருகில் வந்ததாக அந்நாட்டு ராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே நீண்டகாலமாக பதற்றம் நிலவிவரும் சூழலில், கடந்த ஆண்டு யூஎஸ்எஸ் ஃபிராகட் (USS Farragut) என்ற போர்க் கப்பலை அமெரிக்கா அரபிக் கடலில் நிலைநிறுத்தியது.

இந்தப் போர் கப்பல் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரஷ்ய கடற்படையைச் சேர்ந்த போர் கப்பல் ஒன்று அருகே வந்தது. அப்போது, தொடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அந்த ரஷ்யக் கப்பல், யுஎஸ்எஸ் ஃபிராகட்டுக்கு மிக அருகே வந்ததாகவும், நூலிழையில் அந்தக் கப்பல் வழிமாற்றிச் சென்றதால் பெரும் வெடி விபத்து தவிர்க்கப்பட்டதாவும் அமெரிக்க தலைமையகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படையின் 5-வது குழு வெளியிட்டிருந்த வீடியோ

இது தொடர்பாக அமெரிக்க கடற்படையின் 5ஆவது குழு வீடியோவுடன் வெளியிட்டிருந்த ட்வீட்டில், சர்வதேச சட்ட விதிகளை மீறி ரஷ்யப் போர் கப்பல் ஒன்று யுஎஸ்எஸ் ஃபிராகட் கப்பலுக்கு மிக அருகில் வந்ததாகவும், பின்னர் கடைசி நொடியில் அந்த ரஷ்யக் கப்பல் அதன் திசையை மாற்றி அமைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய காட்டுத்தீ பாதிப்புகளுக்கு உதவும் டிகாப்ரியோ!

Intro:Body:

blank


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.