ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பின் இரண்டாம் கட்ட அலை தற்போது ஏற்படத் தொடங்கியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து அங்கு பல்வேறு நாடுகள் தளர்வுகளைக் கட்டுப்படுத்தி முடக்கத்தை நோக்கித் திரும்பிவருகின்றன.
அங்குள்ள மருத்துவமனைகளில் ஐசியு வார்டுகள் நிரம்பிவழியும் நிலையில், பார் போன்ற பொதுவெளிகள் மூடப்பட்டுவருகின்றன. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 தக்கம் தற்போது தீவிரமடைந்துவருகிறது.
ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரான மாட்ரிட்டில் ஒரு வாரம் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் தடுப்புப் பணியில் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இத்தாலியில் பொது இடங்களில் முகக்கவச பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் பரவல் தீவிரமடைந்துவருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஐரோப்பாவில் 98 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அச்சமளிக்கும் நிலை என உலக சுகாதார அமைப்பிற்கான ஐரோப்பிய செயல் இயக்குநர் ராப் பட்லர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த அர்மேனியா-அசர்பைஜான்