ETV Bharat / international

தென் கொரியாவில் 7,400 ஏக்கருக்கு பரவிய காட்டுத்தீ

author img

By

Published : Mar 5, 2022, 11:27 AM IST

தென் கொரியாவில் 7,400 ஏக்கருக்கு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

south-korean-wildfire-destroys-90-homes-forces-6000-to-flee
south-korean-wildfire-destroys-90-homes-forces-6000-to-flee

சியோல்: தென் கொரியாவின் கடலோர நகரமான உல்ஜினில் நேற்று(மார்ச். 4) தொடங்கிய காட்டுத்தீ இன்று 7,400 ஏக்கருக்கு பரவிவிட்டது. 2,000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் 51 ஹெலிகாப்டர்கள், 273 வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. இதுவரை 90 வீடுகள் தீக்கிரையாகின. 6,000 பேர் வெளியேற்றப்பட்டனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன்.

இதனிடையே காட்டுத்தீ உல்ஜினில் உள்ள அணுமின் நிலையம், இயற்கை எரிவாயு ஆலை சுற்றி வளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதியை தேசிய பேரிடர் பகுதியாக அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன் அறிவித்தார். அத்துடன் அணுமின் நிலைய பணியாளர்களை 50 விழுக்காடாக குறைக்க உத்தரவிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களை அங்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: உத்தரகாண்ட் காட்டுத்தீ: 4 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.