ETV Bharat / international

வாய்ப்பில்ல ராஜா... தலிபான்களுக்கு ஆப்கான் அதிபர் திட்டவட்டம்!

author img

By

Published : Mar 8, 2020, 11:23 AM IST

Gani
Gani

காபூல்: அமைதி ஒப்பந்தத்தின்படி 5 ஆயிரம் தலிபன் கைதிகளை விடுவிப்பது தற்போதைக்கு சாத்தியமில்லை என ஆப்கான் அதிபர் அஸ்ரஃப் கானி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புதிதாக மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க - தலிபான் ஒப்பந்தம் ஆரம்பதிலிருந்தே தொடர்ச்சியான பின் விளைவுகளை சந்தித்துவருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை படையெடுத்த அமெரிக்கா, அங்கிருந்த பயங்கரவாத அமைப்பான தலிபான் ஆட்சியை நீக்கி புதிதாக ஜனநாயக அரசை நிறுவியது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றபின், ஆப்கானில் இருக்கும் அமெரிக்கப் படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டார். அதன்விளைவாக அமெரிக்கா - தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் அன்மையில் நிறைவேற்றப்பட்டது.

  • (1/2)
    If the provisions of the agreements are implemented and prisoners are released, the Islamic Emirate is prepared for intra-Afghan negotiations on March 10. Our negotiation team and agenda are ready and will go ahead as agreed.

    — Suhail Shaheen (@suhailshaheen1) March 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஒப்பந்தம் மேற்கொண்ட அடுத்த சில நாட்களிலேயே, ஆப்கானில் தலிபான்கள் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினார். இதையடுத்து, அமெரிக்க ராணுவமும் பதில் தாக்குதல் நடத்திவருகிறது. இப்படி ஆரம்பம் முதலே ஒப்பந்தம் சிக்கலைச் சந்தித்துவரும் நிலையில், தற்போது அடுத்த தலைவலி உருவாகியுள்ளது.

ஆப்கான் அமைதி ஒப்பந்தப்படி, அந்நாட்டு அரசு கைதுசெய்துள்ள 5 ஆயிரம் தலிபன் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஆப்கான் அரசுக்கு தலிபான்கள் அழுத்தம் கொடுத்துவருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள அந்நாட்டு அதிபர் அஸ்ரஃப் கானி, அமைதி ஒப்பந்தத்தின் ஆரம்பத்திலேயே இதுபோன்ற கோரிக்கைகளை தலிபான்கள் திணிப்பது முறையல்ல.

5 ஆயிரம் கைதிகளை அரசு உடனடியாக விடுவிக்கப்போவதில்லை. நாட்டின் ஜனநாயகத் தன்மையை கருத்தில் கொண்டே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமூகத்தில் அந்தஸ்தைப் பெற உழைக்கும் திருவள்ளூர் பெண்களின் கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.