ETV Bharat / international

கரோனா எதிரொலி: பாகிஸ்தானில் பொதுக்கூட்டங்களுக்கு தடை

author img

By

Published : Nov 17, 2020, 8:05 AM IST

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை அந்நாட்டில் 3,48,184 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, கரோனா பாதிப்புகள் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தேசிய ஒருங்கிணைப்பு கமிட்டியுடன் நேற்று (நவ.16) ஆலோசனை நடத்தினார்.

அதன் பின் பேசிய அவர், "உலக அளவில் கரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில், 2ஆம் அலை தொடங்கிவிட்டது. இதனால் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடைவிதிக்கப்படுகிறது" என்று அறிவித்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான கில்ஜித் பல்ஜிஸ்தானில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், இம்ரான் கானின் தெஹ்ரீக் -இ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றிப்பெற்றுள்ளது. தேர்தலில் முறைக்கேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பிபிபி கட்சித் தலைவர் பிலாவால் ஜர்தாரி, தங்களது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, அறிவித்தார்.

இந்நிலையில், பொதுகூட்டம், பேரணிகளுக்கு தடை விதித்து, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: "மாஸ்க்களை மட்டும் விட்டுவிடாதீர்கள்" - எச்சரிக்கும் அமெரிக்க தொற்றுநோய் வல்லுநர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.